Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/28/2011

கேரளாவைப் பார்த்து கற்றுக்கொள்வோமா?


நிலப்பட்டா, அரசு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், உதவித் தொகைகள் என, பலவும் காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது உப்பு சப்பற்ற காரணங்களைக் கூறி, விண்ணப்பத்தைத் தட்டிக் கழிப்பதும், பிறகு அதையே காரணமாக வைத்து, அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதும், வாடிக்கையான விஷயம். 

பொது மக்களும், உரிய கட்டணங்களோடு, லஞ்சமாக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பதும் வழக்கமாகி விட்டது.ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், ஒரு பணிக்கு எவ்வளவு கட்டணம், அப்பணி எவ்வளவு நாட்களில் முடியும், அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தகவல் தெரிவிக்க வேண்டிய அதிகாரியின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்ட, தகவல் பலகை மட்டும், பெரிதாக மாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அதை உண்மையென நம்பி, களத்தில் இறங்கினால், வேலைக்காகாது என்பது வேறு விஷயம். 'நிலப்பட்டா வழங்க ஒரு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கி பிடிபட்டார்' என, பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளிவந்தாலும், அடுத்த கிராம நிர்வாக அலுவலர், லஞ்சம் வாங்க அஞ்சுவதே இல்லை.

காலதாமதம் செய்து லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலர்களை, காலதாமதம் செய்தால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அதுவும் மீட்டர் வட்டி போல் என்று சட்டம் போட்டால், கண்டிப்பாக, நேர்மையாக, சுறுசுறுப்பாக பணிபுரிய வைக்கும்.

நிதர்சனம் இவ்வாறிருக்க, பொதுமக்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காக, கேரள அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.அதன்படி, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் காலதாமதம் ஏற்படுத்தினால், அரசு அலுவலர்களுக்கு தினமும், 250 ரூபாய் வீதம் அதிக பட்சமாக, ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

பக்கத்து வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்தால், நாமும் அதை கடைபிடிப்பதில் தவறில்லையே... கேரள அரசின் வழியைப் பின்பற்றி தமிழக அரசும், இதுபோன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தலாமே! முதல்வர் முன் வருவாரா?

24 comments:

 1. முதல் மலையாளிப்ப்ரியன்

  ReplyDelete
 2. அட.. இதானா.. நான் கூட ஹி ஹி என்னமோன்னு நினைச்சேன்

  ReplyDelete
 3. Good news . . We must create law like this

  ReplyDelete
 4. நல்லா சொல்லி இருக்கீங்க பாஸ்..சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்கவேண்டும்

  ReplyDelete
 5. நல்ல விசயந்தான்

  செஞ்சு பார்க்கலாம் தப்பில்லை..

  ReplyDelete
 6. இதெல்லாம் நல்லாத்தான் பண்றாங்க.டேமுக்கு மட்டும்தான் முரண்டு பிடிக்கறாங்க!

  ReplyDelete
 7. Intha mathiri nalla vishayam ellam namma govt. Enga
  theriyapokuthu ????

  ReplyDelete
 8. //சி.பி.செந்தில்குமார் said...
  முதல் மலையாளிப்ப்ரியன்//
  ஜொள்ளு சிபி, நல்ல விஷயம், தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 9. இந்தியாவே கற்று கொள்ள வேண்டிய விஷயம்.

  ReplyDelete
 10. முன்வருவாரா..
  முன் வரவேண்டும்!

  த.ம ஓ9

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. சொல்லி இருக்காங்க. நல்லபடியா நடைமுறைப்படுத்தட்டும். நம்ம மாநிலத்துலயும் வந்தா மகிழ்ச்சிதான்.

  ReplyDelete
 12. பக்கத்து வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்தால், நாமும் அதை கடைபிடிப்பதில் தவறில்லையே... கேரள அரசின் வழியைப் பின்பற்றி தமிழக அரசும், இதுபோன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தலாமே! முதல்வர் முன் வருவாரா?//

  நாம சொல்லுறதை சொல்லுவோம் முதல்வர் என்ன செயுரார்னு பார்ப்போம்..

  ReplyDelete
 13. //சி.பி.செந்தில்குமார் said...
  முதல் மலையாளிப்ப்ரியன்//
  ஜொள்ளு சிபி, நல்ல விஷயம், தமிழ்மணம் ஏழு.//

  பெல்ட்டை உருவி நாலு சாத்து சாத்துங்க ஆபீசர்...

  ReplyDelete
 14. வணக்கம் பாஸ்...

  தமிழக அரசிற்கு இப் பதிவின் கருத்துக்கள் சென்று சேர்ந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  ReplyDelete
 15. ம்ம்ம்... அருமையான ஒரு பதிவு நண்பா. இப்படியான நல்ல விடையங்களை சம்பந்தப்பட்டவங்களுக்கு கூட இருந்து குழுமிறவங்க காதுகளில் போட்டுவிடமாட்டாங்களா? அவங்க அப்படி இவங்க அப்படி என்று புரணி சொல்லும் இந்த பாலிஸி மேக்கர்ஸ் இப்படியான மன்னுதாரணங்களையும் தலைமைகள் காதிலை போட்டா நன்னா இருக்கும்

  ReplyDelete
 16. நம்ம சைட்டுக்கு வாங்க!
  தளத்துல இணைச்சுகிடுங்க!
  உங்க கருத்த சொல்லுங்க!
  நல்லா பழகுவோம்!...

  ReplyDelete
 17. Haahahahahahaha namma alluga 250rs loseku 2500rs vanki vellai saivanga

  ReplyDelete
 18. நம்ம மாநிலத்துலயும் வந்தா மகிழ்ச்சிதான்....

  ReplyDelete
 19. பார்ப்போம் இது கேரளாவுல எப்படி செயல்படுதுன்னு....!

  ReplyDelete
 20. வந்தா மகிழ்ச்சி தான் நண்பரே....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"