Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/14/2011

தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் பிழைக்க வைத்தான்...


மிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ராமேஸ்வரம், நாகை மீனவர்கள், நேற்று முன்தினம் கூட, இலங்கை கடற்படையினரின் மூர்க்கமானத் தாக்குதலுக்கு உள்ளாகி, வலைகளை கிழித்து எறிந்துள்ளனர்.

இலங்கை அரசின் இந்த அராஜகங்கள் தொடர்வது, வழக்கமாகி விட்டது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் படகுகள், வலைகள், இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன. பிடித்த மீன்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. 

ராமேஸ்வரம் மீனவர்கள், தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துவிட்டு, ராமேஸ்வரம் திரும்புகையில், அதிவிரைவுப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்களால், தமிழக மீனவர்களிடையே, ஒருவித அச்சமும், பீதியும் நிலவுகிறது.

ஐரோப்பிய நாடுகளின், அந்தந்த நாடுகளால், கடல் எல்லைகளை எளிதில் கண்டுகொள்ளும்படியாக, கடலில் மிகப்பெரிய மிதவைகள் விடப்பட்டிருக்கும். அதுபோல், இந்திய கடல் எல்லைகளும், மிகத் துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 

இந்தக் குளறுபடிகளால் தான், மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.(என தோன்றுகிறது) இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு முன் வரவேண்டும். வரலாறு சொல்வது என்னவென்றால், பலம் வாய்ந்த நாடுகள், பக்கத்தில் இருக்கும் நாடுகளையோ அல்லது தீவுகளையோ ஆக்கிரமிக்க முயலும் அல்லது அந்நாடுகளின் மீது அதிகாரம் செலுத்த விரும்பும். 

உதாரணத்திற்கு, சீனா (தைவான்), ஈராக் (குவைத்), இங்கிலாந்து (அயர்லாந்து), அமெரிக்கா (கியூபா). ஆனால், நம் விஷயத்தில் தலைகீழாக உள்ளது. தொடர் தாக்குதல்களால், எத்தனையோ அப்பாவி மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தும், மத்திய அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது என்று தான் புரியவில்லை. 

நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும், ராணுவத்திலும், இந்தியா பலம் பொருந்திய நாடாக உள்ளது. இருந்தும், சின்னஞ்சிறு குட்டி நாடான இலங்கையிடம் குட்டுப்படுகிறோம். ஏற்கனவே, காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து, இந்நாள் வரை, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலேயே அப்பகுதிகள் உள்ளன. 

அதே போன்று, அருணாச்சலப் பிரதேசத்திற்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அடாவடித்தனத்தால், சர்வதேச அளவில் இந்தியா பலவீனமான நாடு என்ற எண்ணம் ஏற்பட வழிவகுக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காணவேண்டும். 

நாகையிலிருந்து, குமரி வரை உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, முதல்வர் ( மத்திய காங்கிரஸ் காரனை நம்பி பிரயோஜனம் இல்லை) மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வாரா?  

சிந்திப்போம் உறவுகளே....

20 comments:

 1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  Press Meet Gallery

  ReplyDelete
 2. மீனவர் நலனை வலியுறுத்தும் அருமையான பதிவு பாஸ்.

  ReplyDelete
 3. இத்தனை ஆண்டு காலத்தில், இவ்வளவு இழப்பை சந்தித்தும் இதற்கொரு ஆக்கப்பூர்வமான தீர்வை எடுக்காதது வெட்கக்கேடான விஷயம்.

  ReplyDelete
 4. தலைப்பு வைடான்னா பாட்டா பாடுற....

  ReplyDelete
 5. இந்தியாவும் இலங்கையும் கடல் எல்லையை இன்னும் தெளிவாக்கவில்லை என்ற சர்ச்சையும் நிலுவையில் உள்ளதையும் கவனிக்க வேண்டும்...

  ReplyDelete
 6. மாநில அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது இயலாத காரியம்..

  ஒரு வேளை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சியே மத்திய அரசாய் இருக்கும் பட்ச்சத்தில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்!!??

  ReplyDelete
 7. சிந்திக்கவேண்டிய விடயம்

  ReplyDelete
 8. நல்ல படைப்பு பாஸ்..

  ReplyDelete
 9. ஆயிரம் சொன்னாலும் நம்ம மானங்கெட்ட மத்திய அரசுக்கு ஒரு மண்ணும் புரியாதுங்க

  ReplyDelete
 10. //
  மத்திய காங்கிரஸ் காரனை நம்பி பிரயோஜனம் இல்லை)
  //

  100 % உண்மை

  ReplyDelete
 11. காங்கிரஸ்க்கு ஊழல் பண்ணவே நேரம் இல்ல ..

  ReplyDelete
 12. அருமையான பதிவு ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 13. கண்டிப்பாக ஒரு நாள் இந்த நலமாய் மாறும். அதுவரை நாம் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

  ReplyDelete
 14. மீனவர் நலனை அறிவுறுத்தும் பதிவு.

  ReplyDelete
 15. இப்படியும் பாடலாம்.தரையில் பிறக்க வைத்தான் சிங்கள துப்பாக்கியில் சாக
  வைத்தான்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"