Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/07/2011

திகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா ?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்களே அதைப்போல் போல்,  சிறைச்சாலைகளில்(?) அடைக்கப்பட்ட குற்றவாளிகளும், சமமாகவே நடத்தப்படவேண்டும் அல்லவா? 

குற்றம் செய்த ஒவ்வொரு வரும் கைதிகள் தான். அவர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்தே, சிறைகள் இருக்கவேண்டுமே தவிர, பதவி, பணபலம், அரசியல் பலம்,  ஆள்பலம், செல்வாக்கு போன்றவற்றால் அல்ல.

அரசின் மிகப்பெரிய பொறுப்பிலும் , அதிகாரத்திலும் இருந்தவர்களும், பிரபல தொழிலதிபர்களும் சிறையில் இருந்தால், அவர்களுக்கு மின்விசிறி,(AC),செய்தித்தாள்,தொலைக்காட்சி,  கழிவறை என, கூடுதளாக பல வசதிகள் செய்து தரப்படுகின்றன.


நாட்டையே உலுக்கிய, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பல ஊழல்வாதிகள், வி.வி.ஐ.பி., கைதிகள் என்னும் விதிவிலக்கில், பல சிறப்பு சலுகைகளை அனுபவிப்பது நியாயமே அல்ல. 

பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட விசாரணைக் கைதிகளானாலும், கொலைக் குற்றமே செய்திருந்தாலும் இவர்கள் இவ்வாறு வேண்டிய பல வசதிகளை, சிறையில் பெற்றுக் கொள்வதற்கு, நம் சட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஓட்டைகளே காரணம்.


முன்னாள், இந்நாள் அமைச்சர்களும், கைதிகளைத் தேடிப் போகும்போது, சிறை காவலர்கள், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம், தனிக்கவனம் செலுத்தவே செய்வர். இது கிரிமினல்களை ஊக்குவிக்கும் செயல். 

இதனால், சிறைப் பணியாளர்களில் பலர் , கைதிகளிடம் விலைபோகும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது . தாம் செய்த குற்றத்தை தவறு என உணர வைக்கவும், மற்றவர் அதே தவறைச் செய்யாமல் இருக்கவும் தான்,  குற்றவாளிகளை சிறையில் தள்ளப்படுகின்றனர். 

இவர்களும், மற்றவர்களைப்போல் தண்டனை அனுபவிக்க வந்த  கைதிகளேயன்றி, பல வசதிகள் அனுபவிப்பதற்கு அழைத்த நம்வீட்டு விருந்தினர் அல்ல. இம்மாதிரி, சிறைகளில் குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கச் செய்யும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும். 

சிறை விதிகளை மீறும் சிறைத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை இனங்கண்டு, அரசு அவர்கள் மீது, கடும் தண்டனை வழங்க வேண்டும். செய்வார்களா?

31 comments:

 1. நல்ல பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள் பாஸ்

  என்ன சமத்துவமோ?ஒன்னுமே புரியலை

  ReplyDelete
 2. சமத்துவம் பேசுவோர் தான் ஜெயிலுக்கு போன பின்னே
  தனித்துவம் கேட்கிறார்கள்.
  எல்லோருக்கும் சமமான சட்டம் அமையவேண்டும்.
  சிறைச்சாலையில் இருக்கும் புல்லுருவிகளை
  அகற்றவேண்டும்.

  ReplyDelete
 3. தண்டனை அனுபவிக்கும் இடம் என்ற நிலை மாறி, பாதுகாப்பாக ஓய்வெடுக்கும் இடம் என்ற நிலை வந்துவிட்டது

  ReplyDelete
 4. இப்ப தான் உங்களுக்கு தெரியுதா?

  ReplyDelete
 5. பணம் உள்ளவன் ஜெயில்-ல கூட சுகமா இருக்கலாம் என்னசெய்ய சமதர்ம சமுதாயம் இப்பிடி ஆயுடுச்சே

  ReplyDelete
 6. சிறை விதிகளை மீறும் சிறைத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை இனங்கண்டு, அரசு அவர்கள் மீது, கடும் தண்டனை வழங்க வேண்டும். செய்வார்களா?


  பதில் தெரியாத கேள்விதான்.

  ReplyDelete
 7. நல்ல ஆதங்கமான கேள்வி... பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 8. வாத்தியாரே பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. //
  வி.வி.ஐ.பி., கைதிகள் என்னும் விதிவிலக்கில், பல சிறப்பு சலுகைகளை அனுபவிப்பது நியாயமே அல்ல. //

  ரொம்ப உண்மை

  ReplyDelete
 10. //
  சிறை விதிகளை மீறும் சிறைத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை இனங்கண்டு, அரசு அவர்கள் மீது, கடும் தண்டனை வழங்க வேண்டும். செய்வார்களா?
  //
  வாய்ப்பே இல்லை ..

  ReplyDelete
 11. என்ன திடீர்னு ஜெயில் பத்தி எல்லாம் பொங்கி இருக்கீங்க

  ReplyDelete
 12. சில கருப்பு ஆடுகளை அரசாங்கமே ஊக்குவிக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை...!!!

  ReplyDelete
 13. அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கத்தை மிக அழகாக
  தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள் த.ம 11

  ReplyDelete
 14. ம்.என்ன பண்றது?

  ReplyDelete
 15. நியாயமான கேள்விகள்...

  ReplyDelete
 16. அட அரசியல்வாதிகள் அடிக்கடி ஜெயிலுக்கு போக இதான் காரணமோ

  ReplyDelete
 17. அருமையான கருத்து கருண்! ஜெயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்தும்!

  ReplyDelete
 18. உங்க கேள்விகள் நியாயமானதுதான் ஆனால் இந்தியநாட்டில் பணபலமும் பதவியும் இருந்தால் மிகுதி எல்லாம் தானே வந்திடுமே.அப்புறம் என்ன.

  ReplyDelete
 19. karun ur mail id please i need some info...
  essundaram@gmail.com

  ReplyDelete
 20. //சி.பி.செந்தில்குமார் said...
  ஃபர்ஸ்ட் கெஸ்ட்//
  சிறைச்சாலைக்கா!

  ReplyDelete
 21. திகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா ?

  நல்ல கேள்வி...

  ReplyDelete
 22. அவர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்தே, சிறைகள் இருக்கவேண்டுமே தவிர, பதவி, பணபலம், அரசியல் பலம், ஆள்பலம், செல்வாக்கு போன்றவற்றால் அல்ல.//

  ஆமாம் நண்பரே இதை அவர்கள் உணர வேண்டும்

  ReplyDelete
 23. what you said is correct...vimalavidya@gmail.com

  ReplyDelete
 24. நாம மட்டும் தான் குற்றம் புரிந்தவர்கள் லிஸ்டில் வருவோம் ..
  ஆயிரம் கோடி அடிச்சாலும் அவங்களுக்கு குளிரூட்டிய அறை..
  என்ன கொடுமை ,,

  ReplyDelete
 25. இவர்களும், மற்றவர்களைப்போல் தண்டனை அனுபவிக்க வந்த கைதிகளேயன்றி, பல வசதிகள் அனுபவிப்பதற்கு அழைத்த நம்வீட்டு விருந்தினர் அல்ல. . .பணம் இருந்தா வெளியேயும் வசதி, உள்ளையும் வசதி. . .என்ன கொடும சகா. . .

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"