Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/13/2011

பதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை


முன்னொரு காலத்தில் போரில் தொடர்ந்து தோல்வியை தழுவிய ஒரு குறுநில மன்னர் ஒருவர்,  இளைப்பாற, ஒரு மூதாட்டியின் குடிசையில்  தஞ்சம் புகுந்தார். 

அம்மூதாட்டி, அம்மன்னரின் பசியைப் போக்க, ஆப்பம் தந்தார். அதிக பசி காரணமாக, அவசரமாக அந்த ஆப்பத்தின் நடுவில் கையை வைத்த அம்மன்னர், தன் விரல்களை சுட்டுக் கொண்டார்.

'உன் அவசர புத்தியால் கையை சுட்டுக் கொண்டாயே, ஆப்பத்தை ஓரத்திலிருந்து சாப்பிடத் தொடங்கி, நடுப்பகுதியை இறுதியில் சாப்பிட்டால் சுடாது' என்றும், 'போரிலும் நீ, இதுபோன்ற அவசர புத்தியினால்தான் தோல்வியைத் தழுவி இருப்பாய்' என்றும், அந்த மூதாட்டி கூறியுள்ளார். 

அவரின் அறிவுரையை ஏற்று, அந்த குறுநில மன்னன், தன் போர் யுக்திகளை மாற்றிக் கொண்டு, மொகலாய மன்னனை வென்றார் என, ஒரு  கதை உண்டு.

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் எந்த ஒரு காரியமும் அவசரப் படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதே... 


டிஸ்கி: இந்த கதை என்னுடைய பள்ளி மாணவர்களுக்காக சொல்லப்பட்ட கதை. இனி வாரம் ஒன்று உங்களுக்காக.. ஹா.ஹா..

32 comments:

 1. அருமையான கதை
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  த.ம 2

  ReplyDelete
 2. சிவாஜி கதை மாதிரி இருக்கே...?

  ReplyDelete
 3. எதுவும் பதறாமல் செய்தால் சிதறாது உண்மை!!!!

  ReplyDelete
 4. குட்டி கதை ..கருத்து இருக்கு ..)

  ReplyDelete
 5. கதை சிறுசு
  கருத்து பெருசு

  ReplyDelete
 6. அறிவுரைக்கு நன்றி !

  ReplyDelete
 7. ////உன் அவசர புத்தியால் கையை சுட்டுக் கொண்டாயே, ஆப்பத்தை ஓரத்திலிருந்து சாப்பிடத் தொடங்கி, நடுப்பகுதியை இறுதியில் சாப்பிட்டால் சுடாது' என்றும், 'போரிலும் நீ, இதுபோன்ற அவசர புத்தியினால்தான் தோல்வியைத் தழுவி இருப்பாய்' என்றும், அந்த மூதாட்டி கூறியுள்ளார். ////

  ஒரு ஆப்பத்தை வைத்து ஒரு யுத்தமுறையை விளக்கியிருக்கின்றார் மூதாட்டி அருமை..நல்ல குட்டிக்கதை

  ReplyDelete
 8. சாணக்கியர் நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.

  ReplyDelete
 9. நண்பரே! நல்லா இருக்கு. ஆனா எட்டாவது படிக்கிறப்பவே இது சொல்லிக் கொடுத்துட்டாங்க.

  ReplyDelete
 10. தானத்திலும் பெரிது நிதானம்.

  ReplyDelete
 11. கருத்து சொல்லும் கதைகள் வரிசையில் ஆப்பக்கதையும்/நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்...உண்மை தான்...நான் சொன்னது கதையை... குட்டிக்கதை...But Cute Karun...-:)

  ReplyDelete
 13. உண்மையிலேயே சூப்பரப்பா.. வாரா வாரம் நானும் வந்துடுறன்

  ReplyDelete
 14. பதறாத காரியம் சிதறாது.

  ReplyDelete
 15. ஆப்பத்துக்குத் தேங்காப்பாலா கடலக்கறியானு சொல்லவே இல்ல...!
  கதை அருமை.. கருத்தும் அருமை!!

  ReplyDelete
 16. கதை நல்லா இருக்கு சிவாஜி மஹராஜ் பற்றிபடிக்கும்போதும் இதுபோல ஒருகதைபடிச்சேன்.

  ReplyDelete
 17. குட்டிக் கதை குட் கதை!

  ReplyDelete
 18. நல்ல கதை வாத்யாரே..என் பையனுக்கு சொல்றேன்.

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா கருண் நேற்று கதாசிரியர் என்று பேரெடுத்தார்! இன்று கதையே சொல்லிவிட்டார்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. நல்ல கதை நண்பரே ,தொடர்ந்து சொல்லுங்கள் ,படிக்கிறேன்

  ReplyDelete
 21. கதை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா... தொடரட்டும்!

  ReplyDelete
 22. நீதிக்கதை... அருமை நண்பரே!

  ReplyDelete
 23. கதை சூப்பர்... கவிதை கதையா மாறுதே... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வணக்கம் பாஸ்,
  நலமா?

  நல்லதோர் நீதிக் கதை,. எனக்கென்னவோ கதையில் இரட்டை அர்த்தம் இருப்பதாவே தோணுது

  ReplyDelete
 25. நல்ல கதை... தொடருங்கள் நண்பரே....

  ReplyDelete
 26. இனிமே கும்மி அடிக்கப்படும் மை லார்ட்!

  ReplyDelete
 27. அருமையான குட்டி ஆப்பம் கலக்கரிக சார்

  ReplyDelete
 28. தேர்தல் நேரத்தில்...
  எப்படி வெற்றி கொள்வது என்று ஒரு குட்டிக்கதை....
  மன்னரே போய் ஒரு சாதாரண பாட்டி வீட்டுல ஆப்பம் சாப்பிட்டிருக்கார்....அதனால ஜெயிச்சார்...
  இப்ப ஒன்றியம், வட்டம், மாவட்டம் கூட ஸ்டார் ஓட்டல்லதான்...சாப்புடுறாங்க....மன்னர் எங்க இங்க வர்றது...ஜெயிக்கிறது....
  நல்ல நீதிக்கதை சார்....
  வாரம் ஒன்று....வரவேற்கிறோம்....

  ReplyDelete
 29. எனக்கு என் வாத்தியார் கூட இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். அவர்சொல்லி இருபது வருஷம் ஆயிட்டுச்சு.. ஆனால் கதை சொல்லும் கருத்து மட்டும் பல வருஷம் ஆனாலும் மாறாது..!! பகிர்வுக்கு நன்றி பாராட்டுதல்கள் கருண்..!! நேரமிருக்கும்போது அப்படியே நம்ம வலைப்பக்கம் வந்துட்டுப் போங்க.. இன்றே செய்யுங்கள்..!!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"