Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/29/2011

என்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங்களா? - ஜோக்ஸ்

**********************************************************************************

அப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

சின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?

அப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!

**********************************************************************************

ஆசிரியர் : இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..?

சின்னா : முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!

**********************************************************************************

ஏட்டு : சார்.. நாம சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ கைதி நைஸா தப்பிச்சிட்டான் சார்.

இன்ஸ் : அடப்பாவி. இப்படி கோட்டைவிட்டுத்தொலைச்சிட்டியே.. இப்போ சாப்பிட்டதுக்கு யார் காசு கொடுப்பாங்க..?

**********************************************************************************

நீதிபதி : கொலையைக் கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..?குற்றம் நடந்த சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..

சாட்சி : இந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..

நீங்க ஒரு குட்டிச்சுவரு..இந்த வக்கீலு கழுதை.. அந்த வக்கீலு புண்ணாக்கு மூட்டை.. அந்த போலீஸ்காரய்யா பாழுங்கிணறு.. இதுக்கு நடுவுலதானுங்கய்யா கொலை உழுந்துச்சு..!

**********************************************************************************

நீதிபதி : கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே.. கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..?

குற்றவாளி : அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!

*********************************************************************************
என்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..

எதுக்கு இவ்ளோ அவசரம்..?

உங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியலே..!

**********************************************************************************

திருடன் : நீ அப்படியே குந்து சார். சாவி எங்கே இருக்குமுன்னு எனக்குதான் தெரியுமே . நான் எடுத்துக்கறேன். நான் என்ன புதுசாவா வர்றேன்..?

**********************************************************************************

சினிமா உலகத்தில இவ்வளவு நாளா இருக்கீங்களே மேடம்.. எப்படி முடிஞ்சது..? உணவுக் கட்டுப்பாடா..? மனசுக் கட்டுப்பாடா..?

ரெண்டும் இல்ல.. குடும்பக் கட்டுப்பாடு..!

**********************************************************************************

முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..

பிற்பகல் அடகு வை..!

**********************************************************************************

ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!

**********************************************************************************

25 comments:

 1. Excellent jokes! That last joke... no chance! Super Karun.

  ReplyDelete
 2. என்னது குடும்பக் கட்டுப்பாடா....? அய்யய்யோ... அய்யய்யோ.....

  ReplyDelete
 3. கலக்கல் நகைச்சுவைகள்... :-) காலையிலயே புன்னகையுடன் ஆரம்பம்.

  ReplyDelete
 4. எல்லாமே சூப்பரு ...

  ReplyDelete
 5. சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!

  nice....

  ReplyDelete
 6. மாப்ள சொல்லும் சேதி இன்று சனிக்கிழமை ஹி ஹி

  ReplyDelete
 7. அவ்ளோ சந்தோசமா? ம்.இருக்கட்டும்.
  இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா?

  ReplyDelete
 8. எல்லாமே அருமையான ஜோக் கருன்.

  ReplyDelete
 9. வாசித்தபின்
  சிந்தனையில் ஓடிய
  நிகழ்வின் உருவச் சித்திரங்கள்
  சிரிக்க வைத்தது
  மனதை

  எல்லா நகைப்பும்
  சுவை

  ReplyDelete
 10. ஹா ஹா ஹா.................. கலக்கல் காமடி

  ReplyDelete
 11. //
  அப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

  சின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..?

  அப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!  //

  சொன்னது உங்க அப்பாதானே ?

  ReplyDelete
 12. ஒவ்வொரு ஜோக்கும் 'சோக்கா' இருக்கு..!!

  ReplyDelete
 13. தூள் கிளப்புங்க கருண்..!! நேரமிருக்கும்போது எனது வலைப்பூவுக்கு வருகை தர வேண்டுகிறேன்.!

  ReplyDelete
 14. அருமையான நகைச்சுவை துணுக்குகள்
  குறிப்பாக சந்தோஷத்தில் கை கால் ஓடாத ஜோக்
  அருமையான மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அனைத்தும் அருமை... குறிப்பாக செயின் குறள் சூப்பர்...

  ReplyDelete
 16. கலக்கல் நகைச்சுவை...

  ReplyDelete
 17. நல்ல நகைச்சுவை அருமை நண்பா

  ReplyDelete
 18. கொஞ்சுண்டு சிரிப்பு வந்துட்டு போயிருச்சு

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"