Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/07/2011

பிரச்சனைகள் வரும்போது....


நமது வெற்றித் தோல்விகளை நம்முடைய மனதுதான் தீர்மானிக்கிறது. நமக்கு முன்னே ஒரு சவால் ஒரு பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வெற்றித் தோல்விகள் அமைகிறது.

நாம் நம்முடைய வரலாற்றைப் பார்க்கும்போது மனிதகுலம் காட்டில்தான் தோன்றியது. அன்றிலிருந்து மனிதன் எதிர்நோக்கிய சவால்கள்தான் எத்தனை, எத்தனை. இயற்கையோடு இன்று வரை நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். 

எனவே பிரச்சனை என்று வரும்போது ஓடும் கோழைத் தனத்தை விட எதிர்த்து நின்று போராடும் குணம் தான் நம்மை செம்மைப் படுத்தும். 

மகாபாரதத்தை பார்த்தோமானால், பிரச்சனை வரும்போது அர்ஜுனன் தப்பியோட நினைக்கும்போது தான் பகவத்கீதையே நமக்கு கிடைத்தது. சவால்கள் வரும்போது ஓடக்கூடாது என கிருஷ்ணன் அறிவுறித்தினான். சவால்களை எதிர்த்துப் போராடு என்றான். அதனால்தான் அர்ஜுனனால் துரியோதனனை வீழ்த்த முடிந்தது.


நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், பாபா பட தோல்வி பற்றி ஒரு மீட்டிங்கில் பேசும்போது நான் யானை அல்ல, குதிரை என்றார். யானை விழுந்தால் எழ நேரமாகும் குதிரை அப்படி அல்ல விழுந்தால் உடனே எழும் என்று சொல்லி, அடுத்த படம் வெள்ளிவிழாப் படமாகக் கொடுத்தார்.

என்றுமே சவால்களை கண்டு பயந்து ஒடுபவனை சமூகம் கண்டுகொள்வதில்லை. மாறாக எதிர்த்து நின்று ஜெயிப்பவர்களை கண்டிப்பாக பாராட்டும்.

ஒன்று மட்டும் தெரிந்துகொள்வோம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளை எதிர்கொள்வோம், நம்மளால் இந்த பிரச்னையை சந்திக்க முடியும் என்று நினைத்தாலே நமக்கு பாதி வெற்றிதான். அந்த சவால்களை சந்தித்து ஜெயிப்பதில் மீதி வெற்றி உள்ளது.

எனவே சவால்களை சமாளிப்போம்...

23 comments:

 1. பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வதைப் பற்றி நல்லாவே விளக்கியிருக்கீங்க. உங்களுக்கும் அதுவே சொல்ல விரும்புவது. துணிவே துணை. நன்றி.

  ReplyDelete
 2. எயுஹ்க்ப்ஜ்த்ப்க்

  ReplyDelete
 3. தோல்வி அடைந்தவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பதிவு.

  ReplyDelete
 4. //நம்மளால் இந்த பிரச்னையை சந்திக்க முடியும் என்று நினைத்தாலே நமக்கு பாதி வெற்றிதான். அந்த சவால்களை சந்தித்து ஜெயிப்பதில் மீதி வெற்றி உள்ளது.
  //
  உண்மையான வரிகள்

  ReplyDelete
 5. //யானை விழுந்தால் எழ நேரமாகும் குதிரை அப்படி அல்ல விழுந்தால் உடனே எழும் என்று சொல்லி, அடுத்த படம் வெள்ளிவிழாப் படமாகக் கொடுத்தார்.//
  ம்யன்றால் முடியாதது ஏதும் இல்லை

  ReplyDelete
 6. எனவே பிரச்சனை என்று வரும்போது ஓடும் கோழைத் தனத்தை விட எதிர்த்து நின்று போராடும் குணம் தான் நம்மை செம்மைப் படுத்தும். /

  nice..

  ReplyDelete
 7. நம்மளால் இந்த பிரச்னையை சந்திக்க முடியும் என்று நினைத்தாலே நமக்கு பாதி வெற்றிதான். அந்த சவால்களை சந்தித்து ஜெயிப்பதில் மீதி வெற்றி உள்ளது.//

  உண்மை கருண்...

  ReplyDelete
 8. நாளை என்னுடைய கமாண்டை பப்ளிஸ் செய்ய வில்லையென்றால் கண்டிப்பாக பின்விளைவுகள் படுபயங்கராமக இருக்கும் என்று எச்சரிக்கிறேன்...

  ReplyDelete
 9. தன்னம்பிக்கை தூண்டும் பதிவு

  த.ம 5

  ReplyDelete
 10. ரொம்ப சரியா சொன்னீங்க.

  ReplyDelete
 11. என்னங்க புதிய புரட்சிகாரனுக்கு பதிலா இது.. விடுங்க பாஸ்...

  ReplyDelete
 12. நான் பிரச்சினையை சந்திக்காத நாளே இல்லீங்க.போராடிகிட்டுதாங்க இருக்கேன்

  ReplyDelete
 13. நீங்க எந்த பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு தான் போல... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. ஸ்கூல் படிக்கும்போது ஒண்ணுமே படிக்காம பரிட்சைத்தாளில் கதை அடிப்போம்... வாத்தியாரும் விடையைத்தான் எழுதியிருக்கான்னு நம்பி மார்க் போடுவார்... இங்க எல்லாமே உல்டாவா நடக்குது...

  ReplyDelete
 15. சொல்வது சுலபம் பாலோ பண்ணுவதுதானே கஸ்ரம்.... அவ்வவ்

  ReplyDelete
 16. சவால்களை சமாளிப்போம்...

  ReplyDelete
 17. நமது வெற்றித் தோல்விகளை நம்முடைய மனதுதான் தீர்மானிக்கிறது. நமக்கு முன்னே ஒரு சவால் ஒரு பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வெற்றித் தோல்விகள் அமைகிறது  மிகவும் உண்மையான வார்த்தைகள்

  ReplyDelete
 18. சவால்களைக் கண்டு சாய்ந்து விடாமல் சமாளிக்க வேண்டும்
  முயற்சி தான திருவினை யாக்கும்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"