Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/09/2011

இது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை !!!


கனிமொழியின் மீது குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அவர்கள் நிரபராதியாக இருந்தால் தன்னம்பிக்கை கண்டிப்பாக அவர்களுக்கு தேவை. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த விஜயகாந்தும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்பட தன்னம்பிக்கை வேண்டும். 


அவமானம் ஒரு மூலதனம்

இந்த உலகம் பல அதிசயங்களைக் கொண்டது. அதே சமயத்தில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. இந்த உலகத்தில் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்பதால் இந்த மொத்த உலகமே நம்மை எதிர்க்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது.

சிலர் சின்னச் சின்ன சங்கடங்கள் நேர்ந்தாலும் அதை அவர்களாகவே பெரிதாக நினைத்துக் கொண்டு கவலையடைகின்றனர். அனால் அவர்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் உங்கள் உடம்பை ஒருவர் அடித்தோ, உதைத்ததோ காயப்படுத்த முடியும். ஆனால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் மனதை இன்னொருவரால் காயப் படுத்தவே முடியாது.

ஒருவருடைய செயல், பேச்சு, எழுத்து, எது உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தாலும், காயப்படுத்தும் அளவிற்கு உங்கள் மனதை அவர் வசம் ஒப்படைத்தது உங்கள் குற்றமே! எப்படி வீட்டிற்கு தேவையில்லாதது வரும் என்று கதவு போட்டு தடுக்கிறோமோ அதைப் போல நம்முடைய மனதையும் தாழ் போட கற்றுக்கொண்டால், எவன் நம்மைப் பற்றி அவதூறாக சொன்னாலும் நாம் கவலைப் படவேண்டியதில்லை.

தேவையில்லாத சொற்களால் நமக்கு வேண்டாதவர்கள் பயன்படுத்தும் நோக்கம் என்ன? அதைக் கேட்டு நம் மனம் புண்படவேண்டும் என்றுதானே? அது நடந்துவிட்டால் அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? எதிரி என்று வந்தபிறகு, அவர்கள் சொல்லுக்கெல்லாம் நம் மனதை கஷ்டப்படுத்தினால் அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களை ஜெயிக்க விடலாமா?

நீங்கள் அவமதிக்கப்பட்டீர்களா? பிறரால் அலட்சியப் படுத்தப் பட்டீர்களா? யாராவது உங்களை அவமானப் படுத்தி இருக்கிறார்களா? ஆம், என்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்து இருக்கிறீர்கள். முன்னேறுவதற்கான அனைத்து விஷயங்களும் உங்களிடத்தில் இருக்கிறது. 

கடைசியாக ஒரு அறிஞர் சொன்னதை நினைவு படுத்துகிறேன்.

'அவமானம் ஒரு மூலதனம்', 
"அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள்; விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள்!!!"

படம் கூகிள் தேடல்மூலம் பெறப்பட்டது.

21 comments:

 1. //'அவமானம் ஒரு மூலதனம்',
  "அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள்; விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள்!!!"//
  வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படும் தத்துவம். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 2. மச்சி நெத்தியடி....

  ReplyDelete
 3. //'அவமானம் ஒரு மூலதனம்',
  "அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள்; விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள்!!!"//

  மிகச் சரியான வரிகள் நண்பரே..

  ReplyDelete
 4. /////////////
  எதிரி என்று வந்தபிறகு, அவர்கள் சொல்லுக்கெல்லாம் நம் மனதை கஷ்டப்படுத்தினால் அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று அர்த்தம்.-
  ///////////


  உண்மைதான் எத்தனை அம்புகள் வீசினாலும் அதை எதிர்கொள்ளுகிற மற்றும் தாங்கிற சக்தி நமக்கு வந்துவிட்டால் அதுவே மிகப்பெரிய பலமாகிவிடும்...


  அழகிய பதிவு...

  ReplyDelete
 5. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் மனதை இன்னொருவரால் காயப் படுத்தவே முடியாது.
  >>>
  மிகச்சரியான கருத்து. பகிர்வி
  ற்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. <<<'அவமானம் ஒரு மூலதனம்',
  "அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள்; விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள்!!!">>>

  பதிவின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. நிச்சயம் சோர்ந்து போய் இருப்பவர்கள் இப்பதிவைப் படித்தால் வீறு கொண்டு எழுவர் என்பதில் சந்தேகமில்லை.. நான் உட்பட..

  நன்றி கருண்.!!

  ReplyDelete
 7. மச்சி வரிகள் ஒன்னோன்னும் உற்சாக வரிகள். பொறாமை காரர்கள் இருக்கும் வரை புறம் சொல்லல் இருக்கும். இது தான் உலகம். நம் வழியில் நம் பயணம்.

  ReplyDelete
 8. அவமானம் ஒரு மூலதனம்',
  "அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள்; விண்ணில் பாயும் நம் வெற்றிக் கலனுக்கான எரிசக்திகள்!!!"//


  நல்ல தத்துவம்

  ReplyDelete
 9. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் மனதை இன்னொருவரால் காயப் படுத்தவே முடியாது//

  இது அனுபவத்தில மட்டும் கிடைக்கிற ஒன்று...

  ReplyDelete
 10. தன்னம்பிக்கை பற்றிய மிக நல்ல பகிர்வு. நன்றி

  ReplyDelete
 11. எங்கேயோ சரியான உள்குத்து நடந்தமாதிரி இருக்கே...??? அப்துல்கலாம் இல்லைதானே...???

  ReplyDelete
 12. அவமானம் மூலதனம், நல்ல பதிவு, கவலை, சோகம் எல்லாம் மனது சம்பந்தப்பட்டது.

  நீங்கள் சொல்வது மிக சரி, ஒருவர் அனுமதியில்லாமல் மனதை யாரும் புண்படுத்த முடியாது.

  ReplyDelete
 13. நானும் இருக்கேன்யா..!!

  ReplyDelete
 14. இந்த உலகம் பல அதிசயங்களைக் கொண்டது. அதே சமயத்தில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது./

  அருமையான நித்ர்சன உண்மை!

  ReplyDelete
 15. ம்ம்ம்... இன்னைக்கும் மைனஸ் ஓட்டு வாங்கல... தலைப்புல "இது"ன்னு போட்டிருந்திருக்கலாமே...

  ReplyDelete
 16. உற்சாக வரிகள். தலைப்பு வேற கொடுத்திருக்கலாம் - இது என்னுடைய கருத்து.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"