Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/13/2011

சிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் !!! - அட்ராசக்க...


திரு. சிபி அவர்கள் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அப்போது நேரம் மாலை 7 மணி. நண்பரின் பேரன் அசோக் சைக்கிளில் வந்து இறங்கினான்.

நண்பர் அசோக்கை சிபி-க்கு அறிமுகப் படுத்தினார்.

'இவன் என் பேரன்' கல்லூரியில் படிக்கிறான். அந்தக் கல்லூரி இங்கிருந்து 15 KM தொலைவில் கிழக்கே இருக்கிறது. தினமும் காலையில் போய், மாலையில் சைக்கிளில் தான் வருகிறான் என்றார்.

அசோக் உனக்கு தினமும் வகுப்புகள் எப்போது முடிகிறது ? என்றி சிபி அவனிடம் கேட்டார்.

"தாத்தா" நாலு மணிக்கு முடிகிறது. எதிர்க்காற்று அதனாலே 15 Km வர 3 மணி நேரம் ஆகிறது. ஆனால் காலையில் தள்ளு காற்று 1 மணி நேரத்திலே போய் விடுவேன் என்று விவரமாக சொன்னான் அசோக்.

தாத்தா நீங்கள் நன்றாக கணக்கு பண்ணுவீர்கள் என மனோ மாமா சொல்லியிருக்கிறார், எங்கே, நான் சொன்ன விவரங்கள் வைத்து இப்போ காற்று மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கிறது? கணக்கு போட்டு சொல்லுங்கள்? என்றான் அசோக்.

உடனே சில நிமிடங்களில் நம்ம சிபி பதில் சொல்லிவிட்டார். 
எங்கே உங்களால் கூறமுடியுமா? சொல்லுங்களேன்..!

30 comments:

 1. நான் கணக்குல weak இல்ல, month .. அதனால பதிலா நீங்களே சொல்லிடுங்க

  ReplyDelete
 2. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கின்றது கொள்ளுதாத்தா கருண் அவர்களே

  ReplyDelete
 3. சிபியைத் தாத்தான்னு சொல்லிட்டு மனோவை மாமான்னு சொல்லி வெறுப்பேத்திட்டீங்களே சிபிக்கு!

  5 k.m.தான் சரி.

  ReplyDelete
 4. நண்பரின் பேரன் அசோக் சைக்கிளில் வந்து இறங்கினான்.//

  இந்த சம்பவம் எந்த வருஷத்துல நடந்துச்சு...???

  சிபிக்கு 25 வயசுதானே ஆச்சு ஹி ஹி...

  ReplyDelete
 5. தாத்தா நீங்கள் நன்றாக கணக்கு பண்ணுவீர்கள் என மனோ மாமா சொல்லியிருக்கிறார்,//

  என்னாது நான் மாமா, சிபி தாத்தாவா அவ்வ்வ்வ்வ்வ், டேய் சிபி, மூதேவி உன் அண்டர்வேரை கிளிச்சிட்டான்யா வாத்தி ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 6. உடனே சில நிமிடங்களில் நம்ம சிபி பதில் சொல்லிவிட்டார். //

  இல்லையே லாஜிக் இடிக்குதே, சிபி கில்மா கேள்வின்னாதான் உடனே பதில் சொல்வான்...

  ReplyDelete
 7. நல்ல கேள்வி ,ம்ம்ம் ...பார்க்கலாம்
  எத்தனை நண்பர்கள் சரியான விடை சொல்கிறார்கள் என்று .

  த.ம 4

  ReplyDelete
 8. ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.......சி.பி அண்ணன் தாத்தாவா அப்ப அவர் வயது என்ன?

  ReplyDelete
 9. சி.பி.எஸ்-ஐ வைத்து போடப்பட்ட கணக்கு சரியாக வருமா?

  ReplyDelete
 10. எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
  காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 11. எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
  காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 12. ஏன் இந்த கோபம்!

  ReplyDelete
 13. காப்பி அடிப்பது, அதை விட்டால் கும்மி அடிப்பது. இப்படி பொழுதை வீண் அடிக்காமல் ஆசிரியர் பணிக்கான நல்ல பணிகளில் ஈடுபடுங்கள் சார்.

  ReplyDelete
 14. தாத்தா மாமா விளையாட்டுக்கு நா வரலைப்பா

  ReplyDelete
 15. தாத்தா மாமா விளையாட்டுக்கு நா வரலைப்பா

  ReplyDelete
 16. ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 17. யோசிக்கிற வேலையே நமக்கு சரிபட்டு வராது. அப்படியே வாழ்ந்து பழகி போச்சில்ல. ஆனா மனோ மாமா ஆன கதை தான் எங்கோ இடிக்கிறது.

  ReplyDelete
 18. தள்ளு காற்று ஒரு மணிநேரத்தில் 15KM செல்வதால் மணிக்கு 15KM வேகத்தில் காற்று வீசுகிறது

  ReplyDelete
 19. தள்ளு காற்று ஒரு மணிநேரத்தில் 15km செல்வதால் மணிக்கு 15 km வேகத்தில் காற்று வீசுகிறது

  ReplyDelete
 20. Paavam cp sir. Ithanai chinna vayasula avarai thaathavaakitteengale

  ReplyDelete
 21. சிபியை தாத்தா என்று சொன்னதால், கண்டித்து வெளியேறுகிறேன். ஹி ஹி ஹி. பதில் சொல்லத் தெரியாட்டா இப்படி ஜகா வாங்குவோம்ல!

  ReplyDelete
 22. பெட்ரோல் விலையை குறைக்க வழிசொல்லி இருக்கீங்க! எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு கட்டவுட்டு வைக்கணும்!

  ReplyDelete
 23. பதினஞ்சு கிலோமீட்டர் பர் அவர் நார்மல் விண்ட் ஸ்பீட்... அப்புறம் எதிர்க் காத்துல வர்றப்பவும் அதே ஸ்பீடுதான்... என்ன ரோடு மட்டும் கொஞ்சம் மேடு...
  ஹி ஹி ஹி....
  #அசிங்கப்பட்ட சிபி மற்றும் மனோவுக்கு வாத்துக்கள்...

  ReplyDelete
 24. கலக்கீட்டீங்க பாஸ்

  ReplyDelete
 25. இதுக்கு தான் நா இந்தப் பக்கம் வர்றதே கிடையாது..
  நா கோவமா கிளம்புறேன்..

  ReplyDelete
 26. சிபி சித்தப்பு படத்தைப் பாக்கும்போது, ஊரு விட்டு ஊரு மாறி வில்லன்களை வேட்டையாட வந்த ஹீரோ லுக்கு தெரியுதே! :-)

  ReplyDelete
 27. ஏன சிலபேரு ரெண்டு ரெண்டு வாட்டி கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க ?
  பதிவப்பத்தி சொல்லனும்ன்னா...
  தாத்தா கரெக்டா சொல்லிட்டாரமே..அவரு பதிவுல போயி கேட்கணும்..பதில் என்னன்னு

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"