என்னடா உலகமிது? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

11/16/2011

என்னடா உலகமிது?


நடு ரோட்டில் 
நாய் ஒன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெரியாமல்,
போன வாரத்தில்...! 


லாரி மோதி 
பெரியவர் ஒருவர்
விழுந்து கிடந்தார்
'யாரும் தொடாதீங்க'
போலீஸ் கேஸ்,
என்றார்கள் 
முந்தாநாள்...!


சற்று நேரத்துக்கு முன்,
செம்மறி ஆடு ஒன்று 
பேருந்து சக்கரத்தில் 
நசுங்கிவிட்டது
உனக்கு,
எனக்கென்று, 
பங்கு போட்டுக் 
கொள்கிறார்கள்
ஆளாளுக்கு...!

21 comments:

 1. இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு வரிகளாய்..

  மாற்றம் என்று வருமோ..?

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 2. சி.பி.செந்தில்குமார் said...
  முதல் ரசிகன்///

  சிபி முதல் ரசிகன் -
  நாய்க்கா? ஆடுக்கா?

  ReplyDelete
 3. அட மனிதா உன்நிலை இதுவா..?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. நாய் பிரியாணி கேள்விப் பட்டதில்லையா?
  ஆமாம் இது நாய் ஆடு பிரச்சினை தானே, வேறு ஏதாவது அர்த்தம் இருக்கா?
  ...

  ReplyDelete
 5. அருமை அருமை
  எதுவும் பயன் பொருத்தே என்பதை
  மிக எளிதாக அழகாகச் சொல்லிப்போகும்
  பதிவு அருமையிலும் அருமை
  த.ம 4

  ReplyDelete
 6. எதிலயுமே ஆதாயம் தேடும் மனிதனை தோலுரித்து காட்டி விட்டீர்கள் சகோ. கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 7. மிருகத்தை விட மனுஷனுக்குதான்யா தான் எனும் புத்தி, நறுக்குன்னு குத்திட்டீங்க வாத்தி...!!!

  ReplyDelete
 8. இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு...

  ReplyDelete
 9. இதைத்தான் கொடுமை என்பார்கள்

  ReplyDelete
 10. என்னாடா உலகம் இது!!!!!!!!!

  ReplyDelete
 11. கேடுகெட்ட உலமடா இது....
  நாக்கின் சுவைக்காய்
  மனிதத்தை கொலை செய்கிறார்கள்....

  ReplyDelete
 12. ம்...இதுதான் இன்றைய மனிதம் !

  ReplyDelete
 13. மனிதம் மரத்துவிட்டது.

  ReplyDelete
 14. ////சற்று நேரத்துக்கு முன்,
  செம்மறி ஆடு ஒன்று
  பேருந்து சக்கரத்தில்
  நசுங்கிவிட்டது
  உனக்கு,
  எனக்கென்று,
  பங்கு போட்டுக்
  கொள்கிறார்கள்
  ஆளாளுக்கு...!////

  இதான் இன்றைய சமுதாயத்தின் யதார்த்த நிலை கவிவரிகள் அருமை

  ReplyDelete
 15. இதுதான் சகோ நாம் வாழும் உலகம்.....வாழ்த்துக்கள் நல்லதொரு பகிர்வுக்கு ...

  ReplyDelete
 16. என்ன உலகமோ போங்க.

  ReplyDelete
 17. மனிதர்களே இறந்தாலும் பார்த்தபடி செல்லும் உலகம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot