Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/23/2011

விலைவாசி உயர்வா? அடப் போங்கப்பா...


"2020ல், நம் இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, பல அறிஞர்களும், பெரியோர்களும் , இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது உண்மையே..


அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறையில் உள்ள சில மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்

இந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள்,மாத கணக்காக விலைவாசி ஏற்றத்தை விவாதிக்கின்றனர்

இன்று பள்ளியில் படிக்கும் மாணவனுக்குக் கூட தெரியும், விவசாய உற்பத்தியை உயர்த்தினால், விலையேற்றம் தானாக குறையும் என்று.

இன்று கார்கள், குளிர்சாதன பெட்டி, இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, "டிவி ”, மொபைல் போன்கள் ஆகியவை, முன்பு இருந்த விலையைவிட குறைந்த விலையில் கிடைக்கக் காரணம், அதிகமான உற்பத்தியே!

விவசாயிகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு அளித்தாலும், அவை முழு அளவில், உரிய நேரத்தில் அவர்களிடம் சேராததாலேயே, உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவே விலையேற்றம். (மீள்பதிவு).

இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க?) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.

14 comments:

 1. //இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க?) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.//

  மிகச்சரிதான் நண்பரே.. கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வந்தாலே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என்பது எண்ணம்.

  ReplyDelete
 2. மீள் பதிவாக இருந்தாலும் காலத்தோடு சரியாக ஒத்துப்போகிறதே. எல்லாம் சரிதான். ஆனால் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இது பற்றி சிந்திக்கவே மாட்டார்கள் என்பதுதானே நிதர்சனம்?

  ReplyDelete
 3. பாராளுமன்ற பெரியவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்...
  ஆனால் நடக்காது போலிருக்கே

  ReplyDelete
 4. அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்ற பெயரில் பணத்தைப் பதுக்காமல் இருந்தாலேகூட நாடு முன்னேறிவிடும். உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமான நிஜம்! அருமை...

  ReplyDelete
 5. ////இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, இரும்பு கரங்களுடன்(அப்படித்தான் சொல்றாங்க?) அரசு ஒழித்துக் கட்டி, பொருட்களின் வினியோகத்தை சீர் செய்தாலே, விலைவாசி தானாக குறையும். இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்./////

  சரியாகச்சொன்னீர்கள் செயலில் இறங்க வேண்டும்

  ReplyDelete
 6. - இரும்பு கரம்ன்னா? ஏன்னா, எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு நடக்கனுமில்ல

  ReplyDelete
 7. நடக்கும் என்பார் நடக்காது....நடக்காதென்பார் நடந்து விடும்!

  ReplyDelete
 8. இவர்கள் விவாதத்தை விட்டு, செயலில் இறங்க வேண்டும்.//

  நடக்குற காரியத்தை பேசுய்யா...

  ReplyDelete
 9. லட்சம் கோடி நாசம் பண்ணிட்டு [[முழுங்கிட்டு]] ஹாயா போயி திகார்ல உக்காந்துட்டு இருக்காங்களே அவிங்களை முதல்ல செரு....ல அடிக்கணும்....!!!

  ReplyDelete
 10. மீள்பதிவு இன்றும் ஒத்துப்போகிறது என்றால்..
  நாம் இன்னும் அடுத்த அடி எடுத்துவைக்கவில்லை என்றே பொருள்.
  வாய்ப்பேச்சில் வீரரடி என்று விவசாயியை வைத்து திருநாள் மட்டும் கொண்டாடி
  தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிப் போகும்வரை...
  விவசாயியின் உழைப்பை உணர்ந்து அவருக்கு தகுந்த நேரத்தில்
  உதவிகள் செய்யாதவரை
  நாம் முதுகெலும்பற்ற ஜடம் தான்....

  ReplyDelete
 11. என்னன்னு சொல்ல இன்னும் நம்ம பிரகஸ்பதிகள் மாறாம தானே இருக்காங்க!!??

  ReplyDelete
 12. தலைப்பு தான் நமக்கு எப்பவுமே சொந்தம் போல....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"