Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/04/2011

அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?


சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் மிகப் பிரமாண்டன நூலகம் கட்டப்பட்டது. 

அங்கு 12 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அங்கு 1,250 பேர் அமர்ந்து படிக்க முடியும். தினமும் 1,300 பேர் வந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கான தனி பிரிவும் உள்ளது.


பல நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் அறிவித்திருந்தார்.நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்து இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

சமச்சீர் கல்வியில் செய்த குளறுபடி இதிலேயும் தொடருமா? 
இந்த தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதி மன்றம் போவார்களா?

36 comments:

 1. காழ்ப்புணர்ச்சியை கொஞ்சம் குறைத்துக்கொள்தல் நலம்....

  ReplyDelete
 2. பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி, அவ்வளவே... திரை மறைவில் என்ன அரங்கேறுகிறது என்று யாருக்கு தெரியும் அனைவர் கவனமும் நூலகம் மீது இருந்தால்.. அய்யா மட்டும் இல்லை அம்மாவும் சாணக்கியம் கத்துகிட்டான்களோ, இல்லை இது சோ வேலையோ என்று யோசிக்குது மனசு

  ReplyDelete
 3. எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பழைக்கணும்.. உதாரணம் முதல்வர்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீடு (நாள் வாரியான)

  ReplyDelete
 4. நூலக விஷயத்துல யாரும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணத் தயாராயில்லை. அதனால உச்சநீதி மன்றம் போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... அடம் புடிக்கிறது தலைவிக்கு அழகில்லை.

  ReplyDelete
 5. இது எல்லாம் சும்மா ஸ்டண்ட் மாதிரி தான் தெரியுது இல்லாட்டி இந்நேரம் புத்தகம் எல்லாம் காணாம போயிருக்கும்

  ReplyDelete
 6. அம்மா எவ்வளவு கேஸ் பார்த்தீருக்காங்க...

  ReplyDelete
 7. இதுபோன்ற சமூக அவலங்களைத்தான் நானும் எழுதியிருக்கிறேன் நண்பா..

  ReplyDelete
 8. மருத்துவமனை என்பது சாதாரண விஷயம் அல்ல... ஒவ்வொரு டிபார்மென்ட்டும் அதற்கு தேவையான அளவில், தேவையான வடிவில் கட்டவேண்டும்...காலுக்கு தகுந்த செருப்பு அணிவதை விட்டுவிட்டு....இருக்கின்ற செருப்பிற்கு ஏற்றதுபோல் காலை வெட்டிக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல.

  ReplyDelete
 9. இந்த காழ்புணர்வு அரசியல் நல்லதல்ல யார் சொல்வது தலைவியிடம் ..

  ReplyDelete
 10. இவங்க அரசியல் போட்டியில் பாதிக்கப்படுவது மக்கள்தானே........

  ReplyDelete
 11. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 12. அம்மாவின் மற்றொரு முட்டாள்தனமான முடிவுக்கு சரியான அடி.

  ReplyDelete
 13. மமதை கொண்டால் குட்ட ஆட்கள் உண்டு இல்லையா...

  ReplyDelete
 14. சர்வாதிகாரப்போக்கை அம்மா கைவிடவேண்டும், சும்மா மக்களை சாக்கா வச்சி திமுக'வை பழிவாங்குரதை உடனே நிறுத்தணும்...

  ReplyDelete
 15. மாசத்துக்கு ஒருமுறை ஏதாவது அசிங்கப்பட வில்லை என்றால் அவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் போல அதான் இப்படி ஆகுது...

  ReplyDelete
 16. எவ்வளவு பட்டாலும் திருந்தாதவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் கேடுகெட்ட ஜனநாயகம், ஏமாந்த மக்கள்

  ReplyDelete
 17. மூக்குடைபடுவது இது முதல் தடவை அல்ல...

  ReplyDelete
 18. சொத்து குவிப்பு வழக்கு கழுத்தை நெருக்கும் நிலைக்கு வந்து விட்ட நிலையில் இதனோடு சேர்த்து மற்ற விடயங்களையும் திசை திருப்ப அம்மா நூலக விடயத்தை எடுக்க முயல்கிறார்.மறுபடியும் நீதிமன்ற்த்தில் கொட்டு வாங்க வாய்ப்பு அதிகம்.

  ReplyDelete
 19. இந்த காழ்ப்புணர்வு அரசியல் நல்லதல்ல ..

  ReplyDelete
 20. இந்த போக்கை குறைத்துக்கொண்டு நாட்டினை நல்வழிபடுத்தும் முயற்சியை மேற்கொள்ளவேண்டு,இல்லாவிட்டால் மக்களால் நிராகரிப்பது நிச்சயம்.இதன் விடை 2016 ஆம் ஆண்டு சட்டமன்றதேர்தலில் தெரியும்.

  ReplyDelete
 21. கிடப்பது கிடக்கட்டும். கெழவியை தூக்கி மனையில் வை என்ற கதைபோல மருபடியும் காப்பியடிக்க ஆரம்பிசாச்சா? ஏன் சார் உங்கள்ட்ட சொந்த சரக்கே கிடையாதா? அப்புறம் எதுக்கு பிலாக்கு ஆரம்பிக்கிரீங்க....

  ReplyDelete
 22. அரசியலில் இதெல்லாம் ரெம்ப சகஜமப்பா

  ReplyDelete
 23. சூடான செய்தி.

  ReplyDelete
 24. இந்த அம்மாவுக்கு இதே பொழைப்பா போச்சு

  ReplyDelete
 25. ஏன் இப்படி அவசரப்பட்டு எதையாவது செய்து குட்டு வாங்குகிறார்?

  ReplyDelete
 26. அம்மாவின் வேட்டை ஆரம்பாகி 5 மாதங்கள் ஆச்சு சகோ

  ReplyDelete
 27. சகோ
  தங்கள் ஐயம் முற்றும் சரியே
  ஒன்று உச்சநீதி மன்றம் போவார் அல்லது அதை மேலும் பராமரிக்காமல்
  படிப் படியாக சீரழிய விடுவார்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. பாதிக்கப்படுவது மக்கள்

  ReplyDelete
 29. ”அவமான அரசி” -க்கு ஒன்றை சொல்லக்கடமை பட்டிருக்கிறேன்.

  உங்கள் சாதனைகளை வரலாறாக்க இன்னும் எவ்வளவோ செயல்கள் இருக்கிறது.

  அதை விடுத்து அவசியமில்லாத காரியங்களைச் செய்து கரி பூசிக்கொள்வதையும், சொந்த ஆட்சியில் சூனியம் வைத்துக் கொள்வதையும் இத்தோடு நிறுத்திக் கொண்டால் நல்லது.

  உங்கள் கையில் பெரும்பான்”மை”
  இருக்கலாம்.

  அந்த “மை” நாங்கள் வைத்தது என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.

  ReplyDelete
 30. @புரட்சிக்காரன் அவர்களே இது காபி பேஸ்ட் பதிவல்ல.. செய்திகள் பகிரும்போது அனைத்து தளங்களிலும் ஒன்றாகத்தான் இருக்கும்.என்னுடைய தளத்தில் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக செய்திகளை திரித்தா வெளியிட முடியும்? அண்ணா நூலகம் பற்றிய தகவல்கள் எல்லா தளங்களிலும் ஒன்றாகத்தான் இருக்கும்.

  என்மீதுள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி தலைவரே...

  ReplyDelete
 31. இந்த காழ்புணர்வு அரசியல் தேவையா

  ReplyDelete
 32. மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'.

  ReplyDelete
 33. ஜோசியம்,முத்து போட்டு பார்த்து போ,என்று வந்தால் உச்ச மன்றத்துக்கும் போவார்கள். இது அரசியல் காழ்புனர்ச்சி அல்ல,பழிவாங்கும் வெறி!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"