Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/03/2011

பெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது? - women, secret ...


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர் பேகோ என்பவர் செய்த ஆய்வு பெண்ணின் மனதின் ஆழத்தை கண்டுபிடித்துள்ளது. (இது கொஞ்சம் பழைய அறிக்கைதான், ஏற்கெனவே பல தளங்களில் விரிவாக வந்துள்ளது, இதில் எளிமையாக ) ஆனால் எண்ணற்ற பல பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து கிடக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ளார் இவர்.


பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்?  என்று அவர் ஆய்வின் முடிவில் தெரிவித்த சில தகவல்கள் உங்களுக்காக..


1. தனித்திறன் (எதுலன்னு தெரியலையே) ஆண்மகனையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று 80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர்.  ஆண்கள் எதையும் வித்தியாசமா க(வித்தியாசம்ன்னா எப்படி) சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று நிறைய பெண்கள் கூறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.


2.  ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்  மதிப்பார்கள் (இது எங்கே) என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.


3. விடுமுறை நாட்களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் விருப்பமாக இருக்கிறது.


4. வாரம் ஒருமுறையாவது கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல்,பீச், பார்க்  என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்.


5. காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண் அதை எடு, இதை எடு என்று சொல்லக்கூடாதாம்.


6. பொம்மை போல,அதுவும் சாவி கொடுத்த பொம்மைப் போல எங்களை  பயன்படுத்தக்கூடாது என்பது எல்லாப் பெண்களின் எண்ணமாக இருக்கிறது.


7. தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகப் பெண்களின் விருப்பமாக உள்ளது.


8. எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும் மனைவியோடு சேர்ந்தே எடுக்க வேண்டும் என பெருவாரியான பெண்கள் விருப்பமாகும்.


9. எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கூறிக்கொண்டிருக்கும் ஆண்களை சுத்தமாக, அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.


என்ன நண்பர்களே பெண்களின் மனதில் உள்ள ரகசியங்களைப் படித்துப் பார்த்ததும் மயக்கம் வருகிறதா? 


இது சும்மா சாம்பிள்தான். அவரின் முழு அறிக்கைப் படித்தால் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவீர்கள்.


ஆனால் அவரின் அறிக்கைப் படி நடந்தால் குடும்பம் சிறப்பாக அமையுமாம்.

26 comments:

 1. அவ்வளவு ஈஸியாக எங்க மனசுக்குள் இருப்பதை கண்டுபிடிக்க விட்டுடுவோமா???

  படைத்த பிரம்மனாலேயே முடியாது!

  ReplyDelete
 2. கருண் கலக்கல் பதிவு .
  ரகசியங்களைப் படித்துப் பார்த்ததும்,,,,,
  வியப்பு அதிகமானது ..
  ரசிக்க வைத்த பதிவு .
  நியாமான கருத்துக்கள் .
  ஆண்களின் இரகசியம்
  ஆபத்தானது....என்ன நண்பா...
  அப்புறம் பதிவு படம் மிக அழகு .
  வாழ்த்துக்கள் கருண் .

  ReplyDelete
 3. கருண் கலக்கல் பதிவு .
  ரகசியங்களைப் படித்துப் பார்த்ததும்,,,,,
  வியப்பு அதிகமானது ..
  ரசிக்க வைத்த பதிவு .
  நியாமான கருத்துக்கள் .
  ஆண்களின் இரகசியம்
  ஆபத்தானது....என்ன நண்பா...
  அப்புறம் பதிவு படம் மிக அழகு .
  வாழ்த்துக்கள் கருண் .

  ReplyDelete
 4. ஆம்பளைங்க மனசுல எந்த ரகசியமும் இருக்காதா அப்ப ஆம்பளைங்களுக்கு எல்லாம் ஓட்ட வாயா?

  ReplyDelete
 5. மதனி மனசையாவது புரிஞ்சுக்கிட்டீங்களா சகோ

  ReplyDelete
 6. இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


  அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

  ReplyDelete
 7. இம்பு்ட்டு விஷயமா இருக்கு...

  ReplyDelete
 8. தெரிந்தது கை அளவு, தெரியாதது உலகு அளவு

  ReplyDelete
 9. முள்ளில் புதைத்துவைத்த பலாப்பழத்தில்
  இனிமை உள்ளிருக்கும் .. உலகத்திலே...
  அழகிய பூக்களில் கொடிய விஷமிருக்கும்
  விடயங்களும் உண்டு....
  மனதை யாரறிவார்.......

  ReplyDelete
 10. //விடுமுறை நாட்களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் விருப்பமாக இருக்கிறது.//

  நமக்கும் அப்படிதான்

  ReplyDelete
 11. //
  தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகப் பெண்களின் விருப்பமாக உள்ளது.

  //

  இது சரி

  ReplyDelete
 12. எங்க நடக்குறது. அமைதியா உட்கார வேண்டியதுதான்.

  ReplyDelete
 13. ஆழங்காண முடியாத சமுத்திரம் பெண் மனம். இங்கு கண்டுணர்ந்ததும் ஓரளவே. இதற்கே மயக்கம் வருகிறதா என்று கேட்டால் எப்படிங்க கருன்? இன்னும் நிறைய இருக்கு...

  ReplyDelete
 14. முழுசாத் தெரிஞ்சவர் யார்?

  ReplyDelete
 15. இத கண்டுபுடிக்கிறதுலேயே அவரோட ஆயுசு முழுசும் செலவிட்டுட்டார்போல....யம்மா தாய்க்குலங்களே...இவ்ளோதானா???இன்னும் ஏதாவது இருக்கா????

  ReplyDelete
 16. அரசால் புரசலா இருந்தது கன்பார்ம் பண்ணின மாதிரி இருக்கு !!?

  ReplyDelete
 17. மொத்தத்தில் ஆண்கள், பெண்களைசுற்றி வந்து "பிராத்தனை செய்யும் பிளையார்களாக" இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்து உள்ளார்கள்!

  ReplyDelete
 18. பெண் மனசு ஆழம். அதுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டு புடிக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க.
  ஒரு வேல இவர் கயிற கட்டி உள்ள இறங்கி பாத்திருப்பாரோ...!?

  ReplyDelete
 19. பெண்ணின் மனதில் இருப்பதை எப்பொதும் யாராலும் அறிய முடியாது

  ReplyDelete
 20. வாத்தியாரே கல்யாணம் ஆச்சா...?

  ReplyDelete
 21. ஆராய்ச்சி நல்லாருக்கு சார்!

  ReplyDelete
 22. நானும் வந்துட்டேன் வாத்தி....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"