Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/02/2011

வாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி ஜாமீன் கிடைத்ததால் நவம்பர் முப்பதாம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் நேரடியாக சென்னைக்கு வராமல் தன்னுடைய  அண்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டில் டெல்லிலேயே தங்கி இருந்தார். 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் கனிமொழி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஆறு மாத காலத்தில் கனிமொழி சிறையில் கடைபிடிக்கப்படும் சட்ட, திட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு நல்லவிதமாகவே நடந்து கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்துள்ளனர்.

அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு முன்பு  அவர் தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் கட்டித்தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார். சிறையை விட்டு வெளியே வரும்போது சிறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.

நாளை காலை 12 மணியளவில் ஜெட் ஏர்வேஸ் வி்மானத்தில் சென்னை வந்து சேருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வரும் கனிமொழிக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் திமுகா வினர் செய்து வருகிறார்கள். என்ன செய்ய, 

உடன்பிறப்புகளே தயாராகுங்கள் மிகப் பெரிய மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்று வரும் திருக்குவளை இளவரசியை வரவேற்க....

23 comments:

 1. ஹி ஹி ஹி நான் ரெடி எனக்கும் ஒரு டிக்கெட் போட சொல்லக்கூடாதா?

  ReplyDelete
 2. த ம மைனஸ் வாங்கி இருக்கு... அங்க கனிக்கு எதிர்ப்பு காட்டராங்களோ இல்லையோ, பதிவுக்கு எதிர்ப்பு காட்டராங்கப்பா......

  வாசிக்க:
  லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

  ReplyDelete
 3. ////உடன்பிறப்புகளே தயாராகுங்கள் மிகப் பெரிய மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்று வரும் திருக்குவளை இளவரசியை வரவேற்க....
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா.............

  ReplyDelete
 4. எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரவேற்பை பிரமாண்டமாக நடத்த போகிறார்கள் எனத் தெரியவில்லை.

  ReplyDelete
 5. மிக்க நன்றி கருண் கருத்திற்கும் வலை விஜயத்திற்கும். இடுகையை வாசித்தேன். உமது தொடர் பயணத்திற்கு வாழ்த்துகள் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 6. உடன்பிறப்புகளே தயாராகுங்கள் மிகப் பெரிய மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்று வரும் திருக்குவளை இளவரசியை வரவேற்க....//

  அம்மிணியை வரவேர்க்கப்போகும் போகும் அனைவரும் ஊழலை ஆதரிக்கிறார்களா...?? திமுக மொத்தமும் கொள்ளை கூட்டமா...?

  ReplyDelete
 7. கடைசி மூன்று வரிகளில் உங்கள் நக்கல் தெறிக்கிறது.

  ReplyDelete
 8. கனிதான் இனி அடுத்த முதல்வர் ...

  ReplyDelete
 9. நக்கலாக மட்டுமில்ல நையாண்டியும் நிறைய.........ஹஹஹா .

  ReplyDelete
 10. மாப்பிள்ளை நையாண்டியில் உன்ன மிஞ்ச ஆளே கிடையாதுப்பா.

  ReplyDelete
 11. நாளைக்கு வரவேற்றுடுவோம்...

  ReplyDelete
 12. பாஸ் நானும் பிரான்சில் இருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டுட்டேன்.... அவங்கள வரவேற்க்கனும் இல்ல...

  ReplyDelete
 13. என்னத்த சொல்ல போங்க........

  ReplyDelete
 14. தலீவா.நான் உடன்பிறப்பே இல்ல தலீவா, நா வல்ல தலீவா!!

  ReplyDelete
 15. குவார்ட்டரும் கோழி பிரியாணியும் உண்டு தானே ...

  ReplyDelete
 16. //உடன்பிறப்புகளே தயாராகுங்கள் மிகப் பெரிய மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்று வரும் திருக்குவளை இளவரசியை வரவேற்க....//

  யாராவது அப்படியே "பாரத ரத்னா" விருதுக்கும், நோபல் பரிசுக்கும் சிபார்சு செய்யுங்கப்பு!!!

  ReplyDelete
 17. நக்கல்?

  ReplyDelete
 18. // மிகப் பெரிய மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்று வரும் திருக்குவளை இளவரசியை வரவேற்க....///

  ஆமாம் நண்பரே..சுதந்திரப்போராட்டத்தில கலந்துக்குட்டு சிறைபோயி திரும்பியிருக்காங்க..

  இதோ நானும் வாரேன் வரவேற்க...

  ஹா..ஹா..ஹா..

  ReplyDelete
 19. சின்ன வீட்டுக்கு பொறந்த...திருக்குவளை இளவரசின்னா...பெரிய வீட்டுக்குப் பொறந்த செல்வி மஹாரானியாப்பா......

  ReplyDelete
 20. ''சின்ன வீட்டுக்கு பொறந்த...திருக்குவளை இளவரசின்னா...பெரிய வீட்டுக்குப் பொறந்த செல்வி மஹாரானியாப்பா...... ''

  பரட்ட பத்தவச்சிட்டியே பரட்ட எத்தன பெற எரிப்பாங்க்களோ சாமீ பயமா இருக்கு ( தினகரன் முன்னாடி , இப்ப வலைதளமா ) எதுக்கும் கொஞ்சம் உசாராதான் இருக்கனும் , இப்பவே பாதி பேர் தலைய காணோம் ......... விடு ஜுட்....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"