தோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/06/2011

தோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா?

னதில் உள்ள
மொத்தத்தையும்
சொல்ல முடிவதில்லை
பிரிவுகள் நிறைந்த
எந்த பயணத்திலும்..

விடைப் பெற்றுக்கொண்ட
சிறிது கணம் கடந்தே
ஞாபகத்திற்கு வரும்
மறந்து போனவைகளின்
கடைசி ரேகை...

நீண்ட பயனத்துக்காய்
குமுதமும், விகடனும்,
மினரல் வாட்டரும் 
வாங்கி வந்த
உன் கைகளைப் பற்றிக்கொண்டு
வெகுநேரம் பேசியப் பின்பு
இம்முறையும் நிகழ்ந்தது
ஞாபகம் வராதவைகளின் ஞாபகம்...

யாருக்கு தெரியும்
நான்கு பேர் சுமந்து செல்கையில்
புதைந்து கிடக்கலாம்
நெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...


22 comments:

 1. யாருக்கு தெரியும்
  நான்கு பேர் சுமந்து செல்கையில்
  புதைந்து கிடக்கலாம்
  நெஞ்சு குழிக்குள்
  வெகுநாளாய் சொல்ல நினைத்த
  ஏதாவதொன்று...//


  அருமை நண்பா

  தமிழ் மணம் முதல் வாக்கு

  மற்றவையும்

  ReplyDelete
 2. நல்லாயிருக்கு...
  பயணம் போகும் போகும் போது, வழியனுப்பிய்வர்களும் நம் நினைவுகளுடன் கொஞ்ச தூரம் வருவது இனிமையே...

  ReplyDelete
 3. அம்புட்டு நாளா சொல்லாம இருப்ப?
  காற்றுள்ள போதே தூற்று தல!

  ReplyDelete
 4. //புதைந்து கிடக்கலாம்
  நெஞ்சு குழிக்குள்
  வெகுநாளாய் சொல்ல நினைத்த
  ஏதாவதொன்று...//
  நிச்சயமாக!
  அருமை.

  ReplyDelete
 5. இது தாண்டா கவிதை....

  ReplyDelete
 6. ////யாருக்கு தெரியும்
  நான்கு பேர் சுமந்து செல்கையில்
  புதைந்து கிடக்கலாம்
  நெஞ்சு குழிக்குள்
  வெகுநாளாய் சொல்ல நினைத்த
  ஏதாவதொன்று...////

  நான் படித்த உங்கள் சிறந்த கவிதைகளில் டாப்-5 வகைப்படுத்த சொன்னால் நிச்சயம் இதுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் அருமை

  ReplyDelete
 7. சொல்ல முடியாத விஷயஙகள் இப்படித்தான் மனசுக்குள்ளே புகைந்துக்கொண்டே இருக்கும்...

  அதனால் சொல்லி விடுங்கள...

  ReplyDelete
 8. சொல்லத்தான் நினைக்கிறேன்....

  சொல்லிடுங்க சீக்கிரம்.
  அப்புறம் இதயம் முரளி கணக்கா இப்படி பீல் பண்ண வேண்டியதுதான்.ஹிஹி.

  நல்ல கவிதை.

  ReplyDelete
 9. அசத்தல் பிடிச்சிருக்கு

  ReplyDelete
 10. மிகவும் ரசித்தேன். பிடிச்சிருக்கு. நல்ல கவிதைக்கு நன்றி!

  ReplyDelete
 11. புதைந்து கிடக்கும் ஆசைகளை
  பிரிவின் தருவாயில்
  அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே
  அருமை...

  ReplyDelete
 12. வாத்தி .. சம்திங் ராங் ....

  ReplyDelete
 13. யாருக்கு தெரியும்
  நான்கு பேர் சுமந்து செல்கையில்
  புதைந்து கிடக்கலாம்
  நெஞ்சு குழிக்குள்
  வெகுநாளாய் சொல்ல நினைத்த
  ஏதாவதொன்று...

  உண்மைதான்..

  ReplyDelete
 14. கடைசி வரி கச்சிதம் ... அருமை..

  ReplyDelete
 15. மச்சி, கோவிச்சுக்க வேணாம்,
  நெசமாவே நீயா எழுதினாய்?

  அம்புட்டு சூப்பரா இருக்கு! கவிதையில நீங்க தேறிட்டீங்க! வாழ்த்துக்கள்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot