பணக்காரனாக யோசனை சொல்லும் நாஞ்சில் மனோ..! - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/17/2011

பணக்காரனாக யோசனை சொல்லும் நாஞ்சில் மனோ..!


நாஞ்சில் மனோ என்பவர் ஒரு புகழ் பெற்ற பதிவர். இவருடைய பூர்வீகம் தமிழகம் என்றாலும் இப்போது ஒரு அரபு நாட்டில் வசிப்பவர்.

திருவிளையாடல் திரைப் படத்தில், "சேர்ந்தே இருப்பது?" என்று நாகேஷ் கேட்க " வறுமையும் புலமையும்" என்று சிவாஜி கூறுவதைப் போல ஒரு காலத்தில் இவரும் கொஞ்சம் வறுமையில் இருந்தார்.

ஒரு முறை அவர் நதியின் அக்கரைக்குச் செல்ல வேண்டி இருந்தது. படகு காரனுக்கு கொடுக்க பணமில்லை.

துணிவுடன் படகுகாரனிடம் சென்று "மக்கா" உனக்கு தற்போது கொடுப்பதற்கு என்னிடம் பணம் கிடையாது. ஆனால் என்னை இலவசமாக அக்கரையில் கொண்டுபோய் விட்டால் நீ பணக்காரனாக மாற ஒரு யோசனை கூறுவேன் என்றார்.

அந்தப் படகுக் காரனும் மனோவின் தோற்றத்தில் மயங்கி ! ஆர்வத்துடன் தலியசைத்தான். மனோவை அக்கரையில் கொண்டு போய் விட்டதும்,
"பணக்காரனாகும் யோசனையைக் கூறுங்கள்?" என்று கேட்டான்.

மனோ அவர்கள் நமுட்டு சிரிப்புடன்,
"இனிமேல் இப்படி யாரையும் இலவசமாக அக்கரைக்கு அழைத்துக் செல்லாமல் இருந்தால் நீ சீக்கிரம் பணக்காரனாகி விடுவாய்" என்றார்.
23 comments:

 1. கொய்யால துடுப்பை எடுத்து மனோ மண்டையில போடுங்கடா....ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 2. படகுகாரன்கிட்டே இப்பிடி அடிவாங்க வச்சிட்டாங்களே அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 3. அட அட அட நல்ல ஐடியாதானே ஹிஹி!

  ReplyDelete
 4. படகுக்காரன் பணக்காரனாகத்தானே மனோ ஐடியா சொல்லிருக்காரு.... நம்மை போல பதிவர்கள் பணக்காரனாக ஏதாவது ஐடியா சொல்ல சொல்லுங்க

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா நல்ல ஐடியாதான்

  ReplyDelete
 6. அந்த படகுகாரர் கருன் நீங்கதானே?பணக்காராயிட்டிங்களா?ஹஹ

  ReplyDelete
 7. ஹா..ஹா..ஹா..

  மனோ அண்ணாச்சி சிறந்த நிதி ஆலோசகர்..

  ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 8. நல்ல ஐடியாவா இருக்கே
  இதுக்கு நாஞ்சிலாரை கதாபாத்திரமாகியதால்தான்
  இது ரொம்ப சிறப்பாக இருக்கு
  தொடர வாழ்த்துக்கள் த.ம 6

  ReplyDelete
 9. மனோ மாட்டினாரா?!ஹா,ஹா!

  ReplyDelete
 10. ஹா ஹா ஹா ஹா
  இந்த சம்பவம் முடிந்ததும்..
  படகுக்காரம் முறைத்ததையும்..
  அப்புறம் எப்படி நண்பர் மனோ இக்கரைக்கு வந்தார் என்று
  நினைக்கையில்
  சிரிப்பு தாங்க முடியவில்லை..

  மனோ மக்களே...
  வாங்கு வாங்கு னு வாங்கிட்டார்யா நம்ம கருன்.

  ஆனால் ஒன்று நண்பரே. இதில் அடங்கிய நிதர்சன தத்துவம்
  மனத்தைக் கவர்ந்தது.

  ReplyDelete
 11. விரைவில் பணக்காரணாகலாம்.. ஆனால் இப்படி சொல்லி நாங்கள் அடி வாங்காதவரைக்கும் சந்தோசம்...

  இன்று என் பதிவு:-- வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...

  ReplyDelete
 12. செமையாக......

  ஏமாற்ற தெரிந்தால் பணக்காரனாகலாமா?!

  ReplyDelete
 13. நல்லா இருக்கு மச்சி.....

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot