இவள்தான் விலைமாது...!? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/28/2011

இவள்தான் விலைமாது...!?
பாலில்லா முலையைப் பார்த்து 
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

ழ்மையும், இயலாமையும் 
என்னோடு போராடும் பொது 
அந்தக் குழந்தையின் அழுகை 
என்னை 
தூங்கவிடாமல் செய்கிறது...!

ன் வீட்டு உலைகூட
என்னைப் போல் 
வெறுமையாய்...!

ந்த சோகத்தில் கூட 
குலுங்கும் 
என் இளமையைக் குறி வைத்து 
இருட்டுக்குள் 
அழைக்கிறான் ஒருவன்...!

தறும் 
என் மழைலையின் 
குரல் கேட்டும் 
வெறும் கல்லாகவே 
இருக்கிறான் கடவுள்...!

பாரம்பரியத்தையும்,
சமுதாயத்தையும், 
தலை முழுகிவிட்டு
பாவத்தைஎல்லாம்
கடவுள்மேல் போட்டு 
பாயை விரிக்கிறேன் 
என் குழந்தையின் 
பசியைப் போக்க...!


18 comments:

 1. என் வீட்டு உலைகூட
  என்னைப் போல்
  வெறுமையாய்...!//

  கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவைக்கும் கவிதை மனதில் ரணமாக....!!!

  ReplyDelete
 2. சிகப்பின் வெளிப்பாடு..நன்று.

  ReplyDelete
 3. வறுமை சோகம் வலி வேறென்ன சொல்ல .  இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

  ReplyDelete
 4. வலியை உணர்த்தும் கவிதை

  ReplyDelete
 5. பசியும், வறுமையும் தான் மக்களை விலை பேசுகிறது...

  உடல்திறனோ, மனத்திறனோ விலை போனால் உழைப்பாளி..
  கற்பு விலைபோனால், விலைமாது!!

  ReplyDelete
 6. வாழ்க்கையில் புரியாத குரூர நிஜங்களின் மற்றுமொரு வெளிப்பாடு! நன்று!

  ReplyDelete
 7. ///பாரம்பரியத்தையும்,
  சமுதாயத்தையும்,
  தலை முழுகிவிட்டு///
  தமிழனின் பாரம்பரியம் அளப்பரியது...

  இன்று என் பதிவு::: எனக்கு தெரிந்த சினிமா 2011
  அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்

  ReplyDelete
 8. புரிந்துகொண்ட விதத்தில் அருமையான கவிதை கருன் !

  ReplyDelete
 9. மனதை கனக்க செய்துவிட்டது உங்க கவி வரிகள்

  ReplyDelete
 10. இப்படிலாம் சொன்னா மட்டும் நாங்க பாராட்டுவோமா!!ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதய நீயும் கேட்டியா !!இது போல அதுவும் விபச்சாரத்தை நியாயப்படுத்தும் வரிகள் ? ஆனால் விபச்சாரம் என்பது மட்டும் ஏனோ தவராக தெரிய வில்லை !!! இதுவும் ஆனாதிக்கமோ!!!!!!!

  ReplyDelete
 11. பாலில்லா முலையைப் பார்த்து
  என் ஒருவயது குழந்தை
  பரிதாபமாக அழுகிறது...!


  Ithai konjam sari seiyalaam ...
  mulai entra varthai eduthuvittu marbagam entru eluthalaam ...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot