Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/05/2011

பிரபல பதிவர் நிருபனும், அவரது மகனும்... இப்படிக் கூட செய்வார்களா?


தன் மகனின் எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலை கொண்டார் நிருபன் செல்வராஜா அவர்கள். அவனை எப்படி உருவாக்கவேண்டும் என்று யோசித்ததில் அவனது ஆர்வத்தினையும் செயல்பாட்டினையும் சோதித்து ஒரு முடிவுக்கு வருவது என திட்டமிட்டார்.


ஐநூறு ரூபாய் நோட்டு, ஒரு ஆப்பிள் பழம், ஒரு நல்ல நாவல் ஆகிய மூன்றையும் தன் மகனின் மேஜை மீது வைத்து விட்டு வந்தார்.

மகன் ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தால் வியாபாரியாகவும், ஆப்பிளை எடுத்தால் விவசாயியாகவும், நாவலை எடுத்து படித்தால் எழுத்தாளனாகவும் உருவாக்குவது என்று முடிவு செய்திருந்தார்.

மகன் அறைக்குள் சென்றான். தனது மகனின் செயலை மறைந்திருந்துப் பார்த்தார். அவரது மகன் ஆப்பிளை சுவைத்தபடியே, நாவல் படித்துக் கொண்டிருந்தான். ஐநூறு ரூபாய் நோட்டை சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான்.

நிருபன் மகனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

டிஸ்கி: நிருபன் மச்சானுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இது ஒரு கற்பனை மட்டுமே. நண்பா ரஜீவா சீக்கிரம் ஒரு பெண் பாருப்பா அவருக்கு, திருமணமானவர்கள் பெற்ற இன்பம்? பெருக நிருபனும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். 

32 comments:

 1. பயபுள்ள...அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு...மாப்ளே நிரூ..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 2. அவரது மகன் ஆப்பிளை சுவைத்தபடியே, நாவல் படித்துக் கொண்டிருந்தான். ஐநூறு ரூபாய் நோட்டை சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான்.

  புலிக்குப் பிறப்பது பூனையாகுமா???

  ReplyDelete
 3. என்ன நிரூபன் பாஸ்க்கு கலியாண விளம்பரம்?

  ReplyDelete
 4. நல்ல கற்பனை,போட்டுத்தாக்குங்க/

  ReplyDelete
 5. ம்..ம்.. நடத்துங்க..

  ReplyDelete
 6. இப்பத்தான் நிரூபனே அடிமை
  விலகினை விட்டு வெளியே வந்தாரு
  அதுக்குள்ள கால்கட்டா?
  நடதுங்க!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. நிருபனுக்கு மூத்தது பெண் தானாம்...


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா செம காமெடி கருன்!

  அப்புறம் நிரூவுக்கு பொண்ணு பார்க்க சொல்லியிருக்கீங்க! அது எனக்கு சுலபமான வேலைதான்! நான் பார்க்குற பொண்ணை கண்ணை மூடிக்கொண்டு, கல்யாணம் கட்ட நிரூபனும் ரெடிதான் கருன்,

  ஆனா........!!  நிரூபனோட மூணு பொண்டாட்டிங்களும் சம்மதிப்பாய்ங்களோ தெரியல!

  ReplyDelete
 9. என்னமோ திட்டம் போடுறாங்கன்னு மட்டும் தெரியுது!ஆனா தெரியல!இங்க இப்படித்தான்,வெள்ளிக்கிழமையில கலியாணம் பண்ணுவாங்க!முதல்ல, நகரசபைக்குப் போய் கையெழுத்துப் போட்டு திருமணப் பதிவு செய்வாங்க!அப்பறமா,சொந்தக்காரங்க எல்லாம் கார்ல ஹோர்ன் அடிச்சு ஆர்ப்பாட்டமா ஊர்வலம் போவாங்க!அப்போ நான் என் பொண்டாட்டிகிட்ட,இன்னொரு "அடிமை" சிக்கிட்டான்னு சொல்லுவேன்!அந்த நெலமைக்கு ஆளாக்கிடாதீங்கப்பா!

  ReplyDelete
 10. மச்சி, காமெடி சூப்பர் மச்சி!

  நான் பிரபல பதிவர் இல்லை மச்சி, சாதா ஆளைய்யா...
  அவ்வ்வ்வ்வ்வ்


  அப்புறமா என் பேரு நிரூபன்!

  ரசித்தேன். இன்னைக்கு நானா மாட்டிக்கிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. இன்று வலையில் தம்பி நிரு சிக்கிட்டாரா?? நல்ல கற்பனை . ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 12. ஹா ஹா செம காமெடி...

  ReplyDelete
 13. எப்படி தல ஒரே ஆளை கும்மவும் செய்யுறீங்க... கொஞ்சவும் செய்யுறீங்க... போங்க ஒரே காமெடி...

  ReplyDelete
 14. அருன்...கலக்கிட்டீங்க நிரூவை !

  ReplyDelete
 15. கற்பனை ரசிக்க வைத்தது..

  இன்று நம் தளத்தில்
  'அடிக்க வர்றாங்க MY LORD'

  ReplyDelete
 16. ஹா.ஹா.ஹா.ஹா..................புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

  ReplyDelete
 17. நிரூபனுக்கு சட்டப்படி கல்யாணம் ஆகவில்லை என்பது உண்மைதான் ஹி ஹி

  ReplyDelete
 18. நல்ல கற்பனை நண்பா

  புத்திசாலி பையன் தான்

  ReplyDelete
 19. அனைத்திலும் வாக்களித்தேன்

  த.ம 14

  ReplyDelete
 20. கற்பனை என்றாலும் கருத்துடன்.....

  ReplyDelete
 21. நல்லாத்தான் பண்ணுறாங்க! இவங்களை எப்படி சமாளிக்கறது?

  ReplyDelete
 22. @Philosophy Prabhakaran
  ..
  நான் இதுவரை யாரை கும்மி இருக்கேன்? #டவுட்டு..

  ReplyDelete
 23. விவசாய வியாபார எழுத்தாளரோ?

  ReplyDelete
 24. ஹா ஹா நல்ல கற்பனைதான்.

  ReplyDelete
 25. அட பாவிகளா ஏதோ சீரியஸ் மேட்டர்நு நினைச்சா இப்படி காமெடி பண்றீங்க...

  By
  http://seenathana.blogspot.com/

  ReplyDelete
 26. அது நாவல் இல்லையே, கீதையாச்சே. அப்புறம் என்ன, நிரூபன் சாரோட பையன் கண்டிப்பா அரசியல்வாதிதான்..

  ReplyDelete
 27. சிரிப்பு சிரிப்பா வருதப்பா

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"