ஒரு பெண்ணிற்காக இப்படியா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/07/2011

ஒரு பெண்ணிற்காக இப்படியா?

ன்னைக் கட்டுப்படுத்த 
முயன்றும் 
என் கால்கள் நகரவில்லை 
என்னை மீறி 
என்னுள்ளிருந்து
ஒரு குரல் ...

வளை நோக்கி
ஹலோ ! நலமா?
எப்படி இருக்கிறீர்கள்?

வளின் மறு பேச்சிற்கு 
இடமளிக்காமல்
நானும் தொடர்ந்தேன்...

த்தனை மாதங்கள்
ஆயிற்று 
உங்களைப் பார்த்து...

ரி, இப்போதும் 
அங்கேயே 
வேலை செய்கிறீர்களா?
சம்பள உயர்வு 
கொடுத்தார்களா?

வள் முகம் 
ஒரு மாதிரியாக மாறியது
வெறுப்பில் 
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 
ஏதோ பேச வர 
அதை பொருட்படுத்தாமல் 
நானும் தொடர ...

ம்மா எப்படி 
இருக்கிறார்கள்.
தம்பி, தங்கை 
சுகம்தானே...

மாப்பிள்ளை பார்த்தார்களே 
உனக்கு 
திருமணம் ஆகிவிட்டதா?

விடாமல் கேட்டுக் 
கொண்டிருந்த நான் 
சிறிது நிறுத்தி 
அவள் முகத்தைப் பார்த்தேன்...

நீ யார்?
உன்னை நான்
பார்த்த மாதிரி இல்லையே?
என்றாள்...!

நானும்தான் 
உன்னை இதுவரை 
பார்த்தது இல்லை 
என மனதில் 
நினைத்துக் கொண்டு
" ஓ .. அது நீங்க இல்லையா சாரி...!"
என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
Repost

17 comments:

 1. வித்தியாசமா இருக்குங்க ,,, ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல சார் ...

  ReplyDelete
 2. உங்கள் பதிவின் தலைப்பை தான் சொல்லவேண்டியிருக்கிறது "ஒரு பெண்ணிற்க்காக இப்படியா ?" அருமை

  ReplyDelete
 3. மாப்ள! நீ போற பஸ் ரூட்டு சரியில்ல போல. தங்கச்சிக்கிட்ட சொல்ல வேண்டியதுதான்

  ReplyDelete
 4. ஓ!சாரி இது உங்க பிளாக் இல்லையா?

  ஹி ஹி

  ReplyDelete
 5. ஹி.. ஹி... இந்தமாதிரி சேட்டையெல்லாம் நான் நிறைய பண்ணியிருக்கேன்...

  ReplyDelete
 6. இதுக்கு பேரு தான் கடலை னு சொல்வாங்களோ.....
  சரிதான்....

  ReplyDelete
 7. தோ பாருடா.... கடலை வறுக்க இப்படியெல்லாம் செய்றாரு இந்த வாத்தி...


  வாசிக்க:
  சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

  ReplyDelete
 8. எப்படியாவது ஒரு பெண்ணிடம் பேசத்துடிக்கும் ஒரு ஆணின் எண்ணம்.நல்லாயிருக்கு.

  ReplyDelete
 9. அருமை..

  பெண்ணிடம் வலிய சென்று பேசத்துடிக்கும் ஆணின் மன எண்ணங்கள் கவிதை வரிகளில்..

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. வணக்கம் நண்பா,
  ஏலவே படித்த கவிதையாக இருந்தாலும், தங்களின் தற்போதைய கவி நடையுடன் பொருந்திப் போகிறது.

  கவனமய்யா...
  ரோட்டில போற வாற பொண்ணுங்க கிட்ட கேட்டு அடி வாங்காம இருந்தா சரி.

  ReplyDelete
 12. ஆகா இப்படியும் இருக்குதா
  கடைசி வரியைப் படித்ததும்தான் புரிந்தது
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 11

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot