Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/15/2011

மனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்?


அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான்.

அவனை திட்டி விரட்டி விட்ட வெற்றிக்களிப்பு இவன் முகத்தில். ஆட்டம் கலைந்தது. எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தனர். இவை எல்லா வற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவர் இப்போது அந்தப் பையனை தன் வீட்டுக்கு அழைத்து உட்கார வைத்தார்.

அவன் எதிரில் ஒரு தட்டு, அதில் இரண்டு மாம்பழங்கள், நான்கு மாங்காய்கள். பெரியவர் சொன்னார், தம்பி நீ நன்றாக விளையாடினாய் அதற்குப் பரிசு இது. எடுத்து சாப்பிடு என்றார்.

அவன் ஆவலோடு மாம்பழங்களை எடுத்து உண்டான், இன்னொன்றையும் உண்டான். பின்பு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

அவனைத் தடுத்தப் பெரியவர், தட்டில் மீதமிருப்பத்தையும் சாப்பிடலாமே என்றார். அவை எனக்கு வேண்டாம் அய்யா. ஏன்? அவை காய்கள். காய்கள் என்றால் சாப்பிடக் கூடாதா? எனக்குப் பிடிக்காது. ஏன்? அவை கசக்கும். இல்லையெனில் புளிக்கும். பரவா இல்லை தின்று பாரேன். இல்லை அய்யா அந்த சுவையை என் உள்ளம் ஏற்காது, " உன் உள்ளம் விரும்புவதை மட்டும் ஏற்கும் நீ.. அடுத்தவர் உள்ளம் விரும்பாததை, நீ விரும்புகின்றவரை கொடுக்கின்றாயே அது நியாயமா?

நானா? புரியவில்லை அய்யா?

சற்றுமுன் ஒரு சிறுவனை வாயில் வந்தபடி திட்டி அழ வைத்தாயே. உன் சொற்க்களை அவனுடைய உள்ளம் உவகையுடன் ஏற்றதா?

இல்லை அய்யா. துன்பம் தந்திருக்கும். அதனால் அழுதான்.

நீ மட்டும் உன் உள்ளம் விரும்பாத காய்களை ஒதுக்குவாய் ஆனால் பிறர உள்ளம் ஏற்க்க விரும்பாத சுடு சொற்களை அள்ளி வீசுவாய்.

அய்யா..நான்..

தம்பி உனக்கு கோபம வந்தால் சுடு சொற்களை வீசவேண்டும் என்பதில்லை. உன்னிடம் எவ்வளவோ நச்சுத் தன்மையற்ற இனிய சொற்கள் இருக்கின்றனவே அவைகளை வீசி அந்தப் பையனின் தவறை சுட்டிக் காட்டி தலை குனிய வைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு காயை வீசி அவன் உள்ளத்தை காயப் படுத்தி விட்டாயே.

தன் தவறை உணர்ந்த அவன் தலைகுனிந்து நின்றான்.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ."

இது சிறுவர்களுக்கான திருக்குறள் கதைகள். ஒரு சிறு முயற்சி. உங்கள் அதரவு இருந்தால் தொடரும்... நன்றி..

24 comments:

 1. சின்னவங்களுக்கோ பெரியவங்களுக்கோ.. நல்லத யாருக்கு யாரு சொன்னா என்ன? நல்லா இருக்கு.. முயற்சி வெற்றி பேர வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்லதொரு முயற்சி.. திருக்குறளை கதையாக்கும் தங்கள் பணி தொடரட்டும்...

  ReplyDelete
 3. கலக்குறிங்க கருன்! சிறுவர்களுக்கான அறிவுரைக் கதை மிகப் பிரமாதம். இதுபோல பல கதைகளைக் கொடுங்கள். வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நல்ல முயற்சி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 5. நல்ல முயற்சி முதல் கதையே சிறப்பாக இருக்கு

  இன்று உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் நேரம் இருந்தால் வந்து பாருங்கள்

  ReplyDelete
 6. புதிய, நல்ல முயற்சி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. குறள் உங்கள் குரலில்...இனிமை...

  ReplyDelete
 8. நல்ல முயற்சி.... அந்த கண்ணாமூச்சி விளையாட்டு எப்போ சொல்லித்தருவ?

  ReplyDelete
 9. நல்ல முயற்சி தொடருங்கோ! சார்!

  ReplyDelete
 10. அறிவுரை கதையைச் சொன்னதற்கு நன்றி..

  ReplyDelete
 11. அறிவுரை கதையைச் சொன்னதற்கு நன்றி..

  ReplyDelete
 12. என் வலையில் மாணவர்களுக்காக கைகோர்க்க வாருங்கள்

  ReplyDelete
 13. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த அறி உரையைகடைப்பிடிக்கலாம்/

  ReplyDelete
 14. ஆதரவு கண்டிப்பாக உண்டு.

  ReplyDelete
 15. அழகாகச் சொன்னீங்க நண்பா...

  அருமை.

  ReplyDelete
 16. வித்தியாசமான புதிய முயற்சி. தொடர வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 17. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகா. . .

  ReplyDelete
 18. குழந்தைகளுக்குச் சொல்ல அருமையான நீதிக்கதை !

  ReplyDelete
 19. இதுபோல வாழ்வியல் பொருள் கூறும்
  கதைகள் அவசியம் நண்பரே..
  தொடருங்கள்.

  ReplyDelete
 20. அருமையா இருக்குய்யா வாத்தி, தொடர்ந்து எழுதுங்கள்...!!!

  ReplyDelete
 21. nal muyarchi.thodaravum Nandri ,

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"