Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/13/2012

காங்கிரசும் , கறுப்புப் பணமும்...இன்றைய தேதியில் உலக அளவில் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டபோதுகூட, நம் இந்திய அரசு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக, பிரதமர் மன்மோகன் சிங் , நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  திட்டக் குழு துணைத் தலைவர் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் இப்போது, நிலைமை தலைகீழாக இருக்கிறது. 

ஆனால் இப்போது அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் எனக் காட்டுகின்றனர். இங்குள்ள வரலாறு காணாத விலைவாசி ஏற்றத்தையும், மிகவும் தாராளப் பணப் புழக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதில், எந்தவித மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. 

இந்த அவலட்சணத்தில் பலர் வெளி நாட்டில் மறைத்துவைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர, நிதி அமைச்சர் பிரணாப்பின் அறிக்கை வேறு சிரிப்பை கிளப்புகிறது. அங்குள்ள தொகையும், கழுதையாக இருந்து, இப்போது கட்டெறும்பாகத் தேய்ந்துவிட்டது. இப்போது, அந்தத் தொகையின் மதிப்பு, 4 ஆயிரம் கோடி ரூபாய் தானாம். 

கடந்த 50 ஆண்டுகளாக, அதைப்பற்றிப் பேசிப்பேசி, ஒரு பைசா கூடப் வரவில்லை. பின்னே எப்படி, அங்கே அந்த அளவு கறுப்புப் பணம் இருக்கும்? இன்னும் சில நாட்களில், இந்த இருப்பும் சுத்தமாகக் காணாமல் போய்விடும். அதைக் கொண்டு வர, அங்கே ஒன்றும் இல்லை என்று, பின்பு கூறுவர். 

சரி, உள்நாட்டிலாவது பதுக்கி இருக்கும் திருட்டுப்பணத்தைப் பரிசோதனை செய்து, வெள்ளைப் பணமாக்க முயற்சியாவது செய்வார்களா என்றால், அதுவும் மிகப்ஏமாற்றம் தான். பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம், பெரிய பெரிய பணக்காரர்கள், ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், இப்போதுள்ள எம்.பி.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பயங்கர தாதாக்கள்! 

பொருளாதாரத்தை தலைநிமிர்த்த, நம் பிரதமருக்கு தனிப்பட்ட ஆலோசகர் வேறு. முன்பு இருந்த முன்னாள் பிரதமர்களான லால் பகதூர் சாஸ்திரி மற்றும்  மொரார்ஜி தேசாய் போன்றோருக்கு இருந்த துணிச்சல்,தைரியம், இப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு கிடையாது. இவர்களிடம், புரட்சிகரமான, வளர்ச்சி தரக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை எதையும் எதிர்பார்க்க முடியாது!

வாழ்க நம் ஜனநாயகம்.. வளர்க கையாலாகாத காங்கிரஸ்....!!!!!!

13 comments:

 1. கம்பேக் பதிவு....

  நல்ல வைப்ரேஷன்....

  இந்த காங்கிரஸ் பன்னாடைகள இன்னும் எவ்ளோ திட்டுனாலும் திருந்தமாட்டானுக

  ReplyDelete
 2. //
  சரி, உள்நாட்டிலாவது பதுக்கி இருக்கும் திருட்டுப்பணத்தைப் பரிசோதனை செய்து, வெள்ளைப் பணமாக்க முயற்சியாவது செய்வார்களா//

  இதை சொன்னால் ப்ரணாப் பணம் எங்கே கருப்பாக இருக்குது என்னிடம் ஆரஞ்ஜு பணம் தான் உள்ளது என மறுபடியும் லூஸு மாதிரி உளருவான்

  ReplyDelete
 3. வாங்க வாத்தியாரே..

  வெல்கம் பேக்..

  ///இவர்களிடம், புரட்சிகரமான, வளர்ச்சி தரக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை எதையும் எதிர்பார்க்க முடியாது!///

  இவங்களே கோடி கோடியா சுருட்டி கறுப்பு பண்மாக்கி வச்சிருப்பதால லேட் பண்ணுறாங்கண்ணு நினைக்கிறேன் மக்கா..

  ReplyDelete
 4. வா மச்சி.... அரசியல் சூடோட வந்திருக்க....

  ReplyDelete
 5. சார்வாள், நாட்டின் பிரதமர் பொருளாதார மேதைன்னு சொன்னாங்களே.

  ReplyDelete
 6. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல தரமான இடுகையுடன் வந்திருக்கீங்க :)

  ReplyDelete
 7. வருக. என்னாச்சி உங்களுக்கு? ரொம்ப நாளா ஆளையே காணுமே?

  ReplyDelete
 8. நலமா அன்பரே!

  பாலுக்குக் காவல் பூணை என்றால் எப்படி உருப்படும்?  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. வாத்தியாரே...இவ்வளவு நாள் வனவாசமா?

  Good to see you back Karun...

  ReplyDelete
 10. பணமெல்லாமே அவுங்கதுதானே! ரொம்பநாளாச்சு உங்கள் தளத்திற்கு வந்து. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

  ReplyDelete
 11. இந்த லட்சணத்துல பிரணாப்தான் புது ஜனாதிபதியாம்? காந்தியின் கனவு நிறைவேறியிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும்! காந்தியின் கனவு! காங்கிரஸை கலைத்துவிடுவது?!

  ReplyDelete
 12. உள்ளூரு கருப்புப்பணம் எல்லாம் சாமியாருங்க கிட்டே இருக்கு பாஸ், அதான் ரொம்ப பாதுகாப்பான இடம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"