அனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்திய அரசு.. - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/08/2012

அனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்திய அரசு..இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் வீழ் வாழும் அனைத்து  ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் இலவசமாக வழங்குவது என மன்மோகன் அரசு  அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச திட்டம்  சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அறிவிக்கப்பட வுள்ளது. நம் நாட்டில் உள்ள 'ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்' என்ற இந்த திட்டத்தின் கீழ் வெறும் செல்போன் மட்டும் அல்லாமல், 200 நிமிடங்கள் வரை  இலவச டாக் டைமும் அளிக்கப்பட உள்ளது.

திட்டக் குழுவும், தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் சேர்ந்து  இந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுக்க இருக்கிறார்கள்.


2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்திய அரசு மக்களை ஏமாற்ற இப்போதே  தயாராகி வருவது இத்திட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

மீண்டும் ஒரு இலவசம்.. 
கடவுளே இது எங்கே பொய் முடியுமோ?


இந்தியாவில் முழுவதுமாக மூன்று வேளை உண்ண உணவில்லை பெரும்பாலான ஏழைகளுக்கு. 

உணவு களஞ்சியங்களில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்கும்படி நம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனைச் செயல்முறைப்படுத்த மனசு வராத மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தை வீணாக இலவச செல்போன் திட்டத்திற்காக விரயமாக்க முயல்கிறது. தமிழகத்தின் (தரித்திரமான ) இலவச திட்ட  ஃபார்முலா மத்திய அரசையும் நாசமாக்கி  விட்டதே! 

இறைவா.. இந்தக் கொடுமையை என்ன என்று சொல்ல? நல்ல திட்டங்களைத் தீட்டி, ஊழல செய்யாத, மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யும்  நல்ல அரசியல்வாதிகள் வரமாட்டார்களா....


படங்கள் உதவி கூகிள் .

8 comments:

 1. இந்தக் கொடுமையை என்ன என்று சொல்ல?
  கொடு 'மை' னு.

  ReplyDelete
 2. ரொம்ப முக்கியம்.வயிறு நிரம்பி விடும்; வறுமை விலகி விடும்.

  ReplyDelete
 3. நாடு உருப்பட வழியே இல்லை!

  ReplyDelete
 4. 2014 தான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.ஆனால் யாருக்கு மாற்றி ஓட்டளிப்பது?

  ReplyDelete
 5. நாம குடுத்து வச்சது அம்புட்டுதான் விடுய்யா....

  ReplyDelete
 6. நல்லா வளரும் அலைபேசி நிறுவனங்கள்.......

  ReplyDelete
 7. சார்,

  உங்களுக்கு பொறாமை, ஏழைப்பாழைகளும் இனிமே செல் போன், எஸ்,எம்.எஸ் அனுப்புவாங்க ,அதனால போன் வச்சிறுக்க நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடுதே , அப்போ அப்போ புதுசா போன் வாஙிகிட்டு கால் வரலைனாலும் வெளியில எடுத்து பார்த்து புதுப்போனை எல்லாருக்கும் காட்டிக்கும் ஸ்டைல் இனிமே செய்ய முடியாதுன்னு வருத்தம் தானே :-))

  எனக்கு அப்படிலாம் இல்லை, எனக்கும் ஒரு போன் கிடைக்குமா, அதில் கேமரா, எஃப்.எம், ஜிபிஆர்.எஸ், இருக்குமா டச் போனா சாதா போன என தீவிர ஆராய்ச்சியில் என் மனம் இப்போதே இறங்கிவிட்டது,கொடுக்கிறது தான் கொடுக்கிறாங்க லேட்டெஸ்ட் மாடல் கொடுக்க சொல்லி ஒரு லட்சம் பேரிடம் கை எழுத்தோ கை நாட்டோ வாங்கி அனுப்பலாம்னு இருக்கேன், நீங்களும் ஒரு கை எழுத்து போடுங்க சார் :-))

  அடுத்து ஒரு லேப்டாப்பும், இணையமும் இலவசம்னு சொன்னா வேண்டாம்னா சொல்லப்போறிங்க, பிளாக் எழுத அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்த அரசுக்கு நன்றின்னு பதிவு போடுவோம்ல :-))


  புது போன் வாங்கலாம்னு இருந்தேன் , திட்டம் கேன்சல்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot