ஒரு பெண் இப்படியா இருப்பாள்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/19/2012

ஒரு பெண் இப்படியா இருப்பாள்?ன்புள்ள அப்பாவுக்கு...

நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.

அன்று,தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!

மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!

இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!

இருந்தாலும் பரவாயில்லை ...

இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

ஓவியம் - இளையராஜா -நன்றி. மீள் பதிவு.

10 comments:

 1. என்றும் பசுமை. எனினும் மனதை உருக்கிடும்.

  ReplyDelete
 2. கவிதை அருமை. ஓவியமா அது. நம்பவே முடியவில்லை. புகைப்படம் போலவே இருக்கிறது.

  ReplyDelete
 3. நமது வழக்கப்படியான திருமணங்களில் உள்ள அடிப்படைப் பிரச்னையை ரொம்ப சுருக்கமாகச் சொன்னாலும் அழுத்தமாகச் சொன்னதற்கு பாராட்டுக்கள்......

  அந்த சிகப்பு எழுத்துக்களால்தான் பாதி குடும்பங்களில் சந்தோஷம் மிஞ்சியிருக்கின்றது போலியாகவாவது!

  ReplyDelete
 4. சிறப்பான பகிர்வு. மீள் பகிர்வு என்றாலும் ரசித்த பகிர்வு. பல வீடுகளில் நிலை இது தான்!

  ReplyDelete
 5. சிறப்பா சொன்னீங்க.....ஒரு பெண் இப்படியா இருப்பாள்.

  ReplyDelete
 6. கவிதை நச்...

  அருமையாக முடித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 7. பளிச்சிடும் யதார்த்தம்

  ReplyDelete
 8. மனதை பிழியும் கவிதை! அருமை! நன்றி!

  ReplyDelete

 9. மீள் பதிவு என்றாலும் நெஞ்சை விட்டு மீளாத பதிவு! அருமை!

  ReplyDelete
 10. இங்கு
  நீங்கள்
  பார்க்கத் தவறியது
  அவர் மனசு அழகா
  என்பதை மட்டும்தான்...!

  இருந்தாலும் பரவாயில்லை ...//

  மனிதம் மறந்த மனங்கள் ..!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot