ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... சோனியாவின் கபட நாடகம்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/31/2012

ஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... சோனியாவின் கபட நாடகம்?


இப்போது நாட்டு மக்கள் தங்களின் ஒரு சகோதரியை இழந்தது போன்ற துயரத்தில் இருப்பதை ஒரு தாய் என்ற முறையில் நான்  புரிந்து கொண்டுள்ளேன். நாட்டில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுட்டுக் கொள்ளகிறேன் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சமீபத்தில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 

இந்த கொடிய மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வைத் தொடர்ந்து அன்னை சோனியா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "நாட்டு மக்கள் தங்கள் சகோதரியை இழந்துவிட்டனர். அந்த துயரத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்". இந்த நேரத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

ஒரு பெண் மற்றும் குழந்தைகளின் தாய் என்ற முறையில் அனைவரின் உணர்வுகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன். உயிரிழந்த மாணவிக்கு நிச்சயம்  உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிக்கு தகுந்த மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை," என்று கூறினார். 

இவரது இந்தப் பேச்சை நம்ம  யார் தயாராக இருக்கிறார்கள்?


5 comments:

 1. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. இத்துனூண்டும் நம்ப மாட்டாங்களா ?

  உங்களுக்கும் உங்கள் அன்புக்குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அன்பரே. வணக்கம்
  எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 4. அன்பரே. வணக்கம்
  எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 5. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot