இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

3/14/2013

இதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்சிக்கல் கூட
அழகாய்த்தான் இருக்கிறது
நீ போட்ட
கம்பிக் கோலம்...!

பிரம்மன் வெச்ச
மிச்சமோ,
உன் இதழோர
மச்சம்...!

அட தெரிந்து கொள்,
'அவள் உன் தேவதை'
மனசு சொன்னது...!
புரிந்துகொள்,
பார்க்கப் போகிறாள் அவள்
'சிறுக சிறுக நீ சாவதை'
புத்தி சொன்னது...!

மழை நீர் விழுந்த
மண்ணில் குழிவுகளாய்
அழகாய் இருக்கிறது
நீ பேசி சென்றபின்
என் மனப் பரப்பு...!

மறுபதிப்பு 

9 comments:

 1. கம்பி கோலம் கலக்கல்

  ReplyDelete
 2. நல்லா இருக்கு.ஏன் இந்த தலைப்பு என்று தான் எனக்குப் புரியவில்லை

  ReplyDelete
 3. கலக்கல் :)

  //ஆதிரா said...
  நல்லா இருக்கு.ஏன் இந்த தலைப்பு என்று தான் எனக்குப் புரியவில்லை//
  same doubt here also :)

  ReplyDelete
 4. மழை நீர் விழுந்த மண்...அழகோ அழகு.

  ReplyDelete


 5. மழை நீர் விழுந்த
  மண்ணில் குழிவுகளாய்

  அழகிய உவமை!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot