Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/14/2013

இரவின் மடியில்...


ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்ஜங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு வயது ( 82 ). 


காலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போனாுளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில, இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.

ஆந்திர மாநிலம், பத்தளபொடியில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமா துறைக்கு வந்தவர். 1952ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல்படம் இந்தி படமாக அமைந்தது. தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை என் செல்வமே என்ற பாடலை பாடினார். "பாசமலர்" படத்தில் வந்த "யார் யார் யார் இவர் யாரோ..." , அதன்பின் "பாவ மன்னிப்பில்" - இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்... படப்பாடல் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கு பாடல்களில் பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார்.

இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது. இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் , இனிக்கும்.
7 comments:

 1. எத்தனை எத்தனை இனிமையான பாடல்களை கொடுத்த மறக்க முடியாத பாடகர்... அவரின் இழப்பு அதிகமன வருத்தத்தை தருகிறது...

  ReplyDelete
 2. அவர்ப் பாடிய அத்துனைப் பாடல்களும் அருமையானது அன்னாரின் மறைவுக்குக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 3. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

  ReplyDelete
 4. எத்தனை இனிமையான பாடகர்.....

  அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்.....

  ReplyDelete
 5. காலத்திற்கும் பொருந்தும் கனிவான குரலில் பாடிய பாடல்களை மறக்க முடியுமா என்ன? அவருடைய பாடல்கள் என்றும் அவர் பெயரை எக்காலத்திற்கும் நிலையாக வைத்திருக்கும்.

  ReplyDelete
 6. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 7. எத்தனை இனிமையான பாடல்கள் தந்தவர், அன்னார் மறைந்தாலும் அவர்தம் குரலும், புகழும் என்றும் நம்மிடையே உயிர்த்திருக்கும். :(

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"