கடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/10/2013

கடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்?யுத்த நெருப்பில்
பொசுங்கிய மேனி,
சுனாமி புயலாலும்
பூமி அதிர்ச்சியாலும்
அழுகிக் கொண்டிருக்கும்  உடல்,
மரங்களை நடு...
பறவைகளைக் கூப்பிடு...
மண் தாய்க்கு அவசரம்
தோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!


டமையைச் செய்
பலனை எதிர்பாராதே
இது பழைய கீதை,
கடமையை சிவப்பு
நாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!

டவுள்
சன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!

6 comments:

 1. 1. சிறப்பு...

  2. அருமை...!

  3. உண்மை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. யுத்த நெருப்பில்
  பொசுங்கிய மேனி,
  சுனாமி புயலாலும்
  பூமி அதிர்ச்சியாலும்
  அழுகிக் கொண்டிருக்கும் உடல்,
  மரங்களை நடு...
  பறவைகளைக் கூப்பிடு...
  மண் தாய்க்கு அவசரம்
  தோல் மாற்று
  அறுவைச் சிகிச்சை...!

  சிறப்பான வரிகள் கூடவே என்
  அன்னையர் தின வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .வாழ்த்துக்கள் சகோ சிறப்பான இப் பகிர்வுக்கும் .

  ReplyDelete
 3. ,மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கடவுளே இல்லை என்ற போது நிம்மதி மட்டும் சந்நிதியில் கிடைக்குமா .. நிம்மதி என்பது புத்தியில் இருந்து உதிக்கணும் , புத்தியை தீட்டுவன் பெறுவான் அதை.. !

  ReplyDelete
 5. அருமை தொடருங்கள்.ஆனாலும் இப்படியெல்லாம் கவலைபடக்கூடாது

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot