இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/31/2013

இந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண்டா?தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.

 தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, "எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார். 

தற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு. 

அதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.

சு.பொன் இருளாண்டி, தேனி ...


6 comments:

 1. காலம் நல்ல பதில் சொல்லட்டும்...

  ReplyDelete
 2. தமிழ்நாடு கெட்டது போதாதா?

  ReplyDelete
 3. ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவுக்கு வித்தாச்சு. இனி யார் பிரதமர் ஆனால் என்ன?

  ReplyDelete
 4. அப்படியே வெள்ளை மாளிகை பிரியாத்தான் இருக்கு அமெரிக்கா அனுப்பி வைங்க....

  அம்மாவுக்கு உலக தலைவிஆகறகுதுக்கூட திறமையிருக்கு

  ReplyDelete
 5. எதுக்கு இந்தியா முழுவதும் 18 மணி நேர மின்வெட்டு ஆவதற்கா?

  ReplyDelete
 6. பிரதமர் ஆவதற்கு ஏதாவது தகுதி இருக்கவேண்டிய அவசியமா?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot