உலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

5/22/2013

உலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை


குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இந்த வருடம் உலக பொருளாதார அமைப்பில் பேச உள்ளார். தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தவர்  நடிகை திவ்யா ஸ்பாந்தனா. 

இவருக்கு உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், சர்வதேச இளம் தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் சர்வதேச பிரச்னைகள், அபாயங்கள் பற்றியும் அதை தீர்க்கும் விஷயங்கள் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். 

இதில் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இளைஞர்கள் அரசியலுக்கு ஏன் வரவேண்டும். கொள்கை முடிவுகளில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். இந்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்க இருக்கிறது.

5 comments:

 1. ஓ!அம்மணி தெறமைசாலிதான் போல!

  ReplyDelete
 2. திவ்யா ஸ்பந்தனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நாம்தான் எல்லோரையும்
  ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து
  குழம்பி இருக்கிறோமோ
  ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கர்நாடக முன்னாள் முதர்வரின் பேத்தியாயிட்ட்ரே.வாழ்த்துவோம்

  ReplyDelete
 5. நாட்டுக்கு நல்லது செய்தால் சரி!!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot