இதை இரசிக்கவில்லை என்றால் நீ மனிதனே அல்ல... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/01/2013

இதை இரசிக்கவில்லை என்றால் நீ மனிதனே அல்ல...ன்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!
மேகம் கறுக்கையில்
அம்மாவின் முகமும் கறுக்கும்
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்காடாகும் ...!

சோறு வடிக்க
உதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!

நீர் ஒழுகாத இடத்தில்
ஒன்டிக்கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை ...!

கிடைக்கும் ஒரு வேலை
சோற்றுக்கும்
மண்ணள்ளிப் போடும்
நனைந்த விறகும் அடுப்பும் ...!

ழை வலுக்க
கழிவு நீரும்
மழை நீருடன் சங்கமமாகி
அழையா விருந்தாளியாக
குடிசைக்குள் நுழையும்
அவை விட்டு சென்ற
வியாதிகள் உதவியுடன்
உலகை விட்டுச் சென்ற
தங்கை ஒன்று ...!

வ்வொரு மழையும்
விட்டுசெல்லும் ஞாபங்கள்
மறையும் முன்னே
அடுத்த மழை...!!!

இன்று கண்ணில் பட்டது
ஒரு வரி
"மழையை  ரசிக்காமல் யாரிருப்பார்  ?"

Repost

8 comments:

 1. அழகை ரசிக்கும் ரசனை
  நம் நிலை பொறுத்துதான் உள்ளது
  மனதை ஈரமாக்கிப் போனது தங்கள் கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உலகை விட்டுச் சென்ற தங்கை... மனம் கனத்தது...

  ReplyDelete
 3. நல்ல கவிதை.

  மழையினால் சோகம் கொண்டவர்கள் நிச்சயம் மழையை ரசிக்க முடியாது!

  ReplyDelete
 4. மேகம் கறுக்கையில் தாயின் முகம் கறுக்கவே செய்யும்.

  ReplyDelete
 5. படிக்கும்போதே சோகம் அள்ளுது அவனின் நிலை. இதில் எப்படி அவன் மழையை ரசிப்பான்!!??

  ReplyDelete
 6. ஏழை வீட்டில் உலவும் சோகம்.. அழகிய கவிதையில்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot