அதிமுக வேட்பாளர் மாற்றம் - பின்னணி என்ன? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/12/2013

அதிமுக வேட்பாளர் மாற்றம் - பின்னணி என்ன?


அதிமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களில் சரவணப்பெருமாள் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கு.தங்கமுத்து போட்டியிடுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் டாக்டர் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், டாக்டர் லட்சுமணன், எஸ்.சரவணபெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் சரவணப் பெருமாளுக்கு பதிலாக புதிய வேட்பாளராக கு.தங்கமுத்து என்பவரை அறிவித்துள்ளார். வேட்பாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட சரவணப்பெருமாள் மாணவரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள்ளார். 

மாற்றப்பட்ட பின்னணி சசிகலாவின் ஆதரவாளரான சரவணப்பெருமாள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாகவும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பும் என்றும் உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவிற்கு தகவல் சென்றதால், வேட்பாளரை உடனடியாக மாற்றியுள்ளார்.

நன்றி இணைய செய்திகள்.

6 comments:

 1. சரி...இப்போ அதுக்கு நாம என்ன செய்யலாம்...?

  ReplyDelete
 2. //
  Blogger MANO நாஞ்சில் மனோ said...

  சரி...இப்போ அதுக்கு நாம என்ன செய்யலாம்...?
  //

  என்ன வேணுமானாலும் பண்ணலாம் ..

  ReplyDelete
 3. அதெல்லாம் அம்மா கட்சியில் சகஜமப்பா.............

  ReplyDelete
 4. எல்லாமே அவசர கதியான முடிவுதானா? அம்மா ரொம்பவே படுத்துகிறார்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot