நடிகை மனோரமாவிற்கு என்ன ஆச்சு? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/02/2013

நடிகை மனோரமாவிற்கு என்ன ஆச்சு?


ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர் மனோரமா. திரையுலகினரால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர். இப்போதும் கூட நடித்து வருகிறார். 

சமீப காலமாக அடிக்கடி உடல் நலக் குறைவுக்குள்ளாகி சிகிச்சை் பெற்று வருகிறார். முன்பு மாடிப்படியில் தவறி விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டது. பின்னர் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதிலிருந்து ஓரளவு தேறிவந்த அவருக்கு ரஜினி கமல் உள்ளிட்டோர் போனிலும் நேரிலும் ஆறுதல் கூறினர்.

ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த அவர், சமீபத்தில் தன் பேரன் திருமண அழைப்பிதழை மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வழங்கினார். இந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் உடல்நிலை மோசமானது. 

அவரை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மனோரமாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருடைய உடல் நலம் விரைவில் குணமடைய எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டுவோம்.

8 comments:

 1. மனோரமா நலம் பெற வேண்டுகிறேன்

  ReplyDelete
 2. பெண் சிவாஜி என செல்லமாக
  அழைக்கப்படும் ஆச்சி சீக்கிரம் குணமடைய
  ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்

  ReplyDelete
 3. விரைவில் நலம் பெறட்டும்...

  ReplyDelete
 4. நலம் பெற வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 5. நல்ல நடிகை! விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

  ReplyDelete
 6. வாழ்க வளமுடன்

  ReplyDelete
 7. வாழ்க வளமுடன்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot