ஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/18/2013

ஆனந்தி - இவளை உங்களுக்கு பிடிக்குமா?


ம்மா 
நான் இன்னைக்கு 
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
உங்க கூட 
வேலைக்கு வரேன்...

புத்தகப் பையையும் 
சாப்பாட்டுக் கூடையையும்
ஓரமாய் வைத்துவிட்டு 
அழ ஆரம்பித்துவிட்டாள்
ஆனந்தி...!

ண்டி 
சிறுக்கி மவளே
கொழுப்பாடி உனக்கு 
ஒன்னாவுது படிக்கும்போதே
இவ்வளவு அடமா?
இரு உன்னைய
அந்த பூச்சிக் காரன் கிட்ட 
புடுச்சி குடுக்கறேன் என்றாள்...!

த்தா அடிக்கடி 
பூச்சிக்காரேன்,பூச்சிக்காரேன் ன்னு 
பயமுறுத்துறியே ?
அவன் எப்படி இருப்பான் 
தேம்பியபடி கேட்டாள்
ஆனந்தி...!

முறுக்கிய மீசை,
சிவந்த கண்கள்,
முரட்டு உருவம்,,
எப்போதும் போதையில இருப்பான் 
அடிப்பான்,
காலால உதைப்பான்,
தப்பு பண்ணாலும், பண்ணாட்டியும்
போட்டு மிதிப்பான்,
அவன்தான் பூச்சிக் காரன் ...!

துவரை அழுது கொண்டிருந்த 
ஆனந்தி,
அம்மாவிடம் அமைதியாக கேட்டாள்..
பூச்சிக் காரனுக்கு 
இவ்ளோ பயப்படறியே 
நீ எப்படிம்மா 
அப்பாவ கல்யாணம் 
கட்டிகிட்ட?
Repost

4 comments:

 1. பூச்சிக்கார அப்பா?!

  ReplyDelete
 2. பூச்சிக் காரனுக்கு
  இவ்ளோ பயப்படறியே
  நீ எப்படிம்மா
  அப்பாவ கல்யாணம்
  கட்டிகிட்ட?//இப்படியா சொல்லிக் கொடுப்பது?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot