நான் வேண்டுமா? சந்தானம் வேண்டுமா? கோபத்தில் விஷால் !? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/01/2013

நான் வேண்டுமா? சந்தானம் வேண்டுமா? கோபத்தில் விஷால் !?


பட்டத்து யானை என்கிற புதிய படம் படம் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கொண்டு காத்து இருக்கிறார் விஷால்.

படத்தின் முதல் பாதியில் சமையல்காரனாகவும், இரண்டாம் பாதியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்று நடிக்கிறார் விஷால்.

இந்தப் படத்தில் வரும் பெரிய ட்விஸ்ட் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் என்று சொல்லி வருகிறார்.

'மலைக்கோட்டை' படத்துக்குப் பிறகு இயக்குனர் பூபதிபாண்டியனுடன் இணைந்திருக்கும் விஷால் படத்தில் சந்தானம் இருப்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

ஆனால், அதுவே இப்போது பேரும் தலைவலி ஆகியிருக்கிறது. அப்பா, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் வரும் சந்தானம் வரும் போர்ஷன்கள் படத்தில் அதிகமாக வருகிறதாம்.

படத்தின் ஹீரோவைக் காட்டிலும் காமெடி நடிகருக்கு இயக்குநர் பூபதி பாண்டியன் முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி?  எனக்கு ஸ்கோப் இல்லாமல் செய்வது சரியில்லை என்று கோபமுகம் காட்டுகிறார் விஷால். பார்போம் படம் வெளிவரட்டும்.

3 comments:


  1. எப்படி இச் செய்திகளை தேடிப்பிடிக்கிறீர்! வியப்பே

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot