பெண்கள் எப்போதுமே இப்படித்தானா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/03/2013

பெண்கள் எப்போதுமே இப்படித்தானா?



கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

முடிவுல வக்கீல் ஜட்ஜ பார்த்து ஒன்னே ஒன்னு சொன்னாரு...

கடுப்பேத்துறா மை லார்ட்....

அன்னிக்கு வேலைய விட்டு போன ஜட்ஜு இன்னும் கோர்ட்டுக்கு வரல..

இணையத்தில் ரசித்தது.

7 comments:

  1. ஹா... ஹா... பிறகு எப்படி வருவார்...?

    ReplyDelete
  2. பாவம்தான் அந்த வூட்டுக்காரர். ஆனா, வக்கீல என்ன ஆனார்ன்னு சொல்லவே இல்லியே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot