என்னது ? கலைஞர் கருணாநிதிக்கா - அப்படியா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/05/2013

என்னது ? கலைஞர் கருணாநிதிக்கா - அப்படியா?
தெல்லாம்

இந்த உலகத்தில்
உருகும்  சக்தி படைத்தவை?
மெழுகாய்,
உனை நினைக்கும்போது
கரையும்....
என் மனதைத் தவிர...!


நீ...
அறிவியல் பிரிவு

படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?


பெண்ணே
அன்று  நீ கொடுத்த
சிரிப்பை
இன்று
என் இதயம் மூலம் எடுப்பது
“ ஒவ்வோரு விசைக்கும் சமமான
எதிர்விசை ஒன்றுன்டு”
எனும்
நியூட்டன் விதியா?


ற்றுமுன் அவள்  நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
ஆனால்
பூமி அதிர்ச்சி வந்தது போல
ஏன்  இன்னும் அதிர்கிறது
‌என் இதயம்...!


நீ வரும் நேரம்
தாமதமானால்
பூவா?தலையா?
விளையாட்டு
பூ.. தான் எப்பவும்
விழுகிறது அன்பே..
நீ வந்து கொஞ்சம்
தலைகாட்டு...!

மூத்த தமிழக அரசியல் வாதிக்கு 90 வது பிறந்த நாள் வாழ்துக்கள்...


5 comments:

 1. குறுங்கவிதைகள் அனைத்தும் ரசனை. அதிலும் ஒரு பூவையே தலையைக் காட்டச் சொன்ன கடைசிக் கவிதையை மிக ரசித்தேன்!

  ReplyDelete
 2. கிழிந்த... அதிர்ந்த... இதயம் - மிகவும் பிடித்தது...

  ReplyDelete
 3. அறிவியல் கண்டுபிடிப்பு அற்புதம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கவிதைகள் அனைத்துமே அருமை..... ரசித்தேன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot