புத்தகயாவில் வெடிகுண்டு? இதில் கூடவா காங்கிரஸ் அரசியல் செய்யும்? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

7/19/2013

புத்தகயாவில் வெடிகுண்டு? இதில் கூடவா காங்கிரஸ் அரசியல் செய்யும்?உலகத்தில் இருக்கும் மக்கள் எல்லாம், துன்பம் அடைவதற்கு என்ன காரணம் என்பதற்கு, விடை தேடி, பல இடங்களில் அலைந்து திரிந்த சித்தார்த்தனுக்கு, ஞானம் கிடைத்தது, கயா எனும் இடத்திலிருந்த, அரச மரத்தின் அடியில். ஞானம் பிறந்த அந்த இடத்தில், இன்று என்ன நடக்கிறது?


வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. ரத்தம் சிந்தப்படுகிறது. புத்தர் சிலை உடைந்து, சுக்கு நூறாக, வெடிகுண்டு வைக்கப்படுகிறது. இதை விட கேவலம், இந்தியாவிற்கு வேறு என்ன வேண்டும்?


கோவிலுக்கோ, சிலைக்கோ மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், புத்த மத நாடுகளான இலங்கை, ஜப்பான், சீனா, திபெத், தாய்லாந்து போன்றவை, நிச்சயம் கொதித்து எழுந்திருக்கும். 

முஸ்லிம்களுக்கு, "மெக்கா' எவ்வளவு புனிதமானதோ, கிறிஸ்தவர் களுக்கு, "பெத்லேகம்' எவ்வளவு புனிதமானதோ, இந்துக்களுக்கு, "காசி' எவ்வளவு புனிதமானதோ, புத்த மதத்தினருக்கு அவ்வளவு புனிதமானது, "புத்த கயா' எனும் புண்ணிய ஸ்தலம். அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலத்திற்கு, இன்று பாதுகாப்பு இல்லை. 


இந்தியாவில், மன்மோகன் சிங்கின், "பொற்கால' ஆட்சியில், வெடிகுண்டுகள் ஆங்காங்கே வெடிப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது.

நிதிஷ் குமார், மன்மோகன் சிங்குக்கு இப்போது செல்லப் பிள்ளையாகி விட்டதால், காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை போலும்.

எல்லாம் அரசியல்...

3 comments:

  1. கொதித்தெழும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை சேர்க்க வேண்டாம்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot