Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/10/2013

சிக்கன் சாப்பிடுற பழக்கம் இருக்கா? அப்ப கண்டிப்பா இதை படிங்க....


சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், கனிமங்களும் சிக்கனில் அதிக அளவில் இருந்தாலும் கூட, அவை நமக்கு சில சமயங்களில் தீங்கை விளைவிக்கும் என்பது நம்மால் மறுக்க முடியாது. 

அதிலும் குறிப்பாக ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர். ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை. 

பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில் கர்ப்பப்பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். இப்போது அந்த சிக்கன் விங்ஸை உண்பதால் ஏன் இவ்வளவு பிரச்சனை என்பதை பார்ப்போம்!!!


ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. * மேலும் இந்த ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. 

ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் இறக்கைகளில் அதிகமாக இருக்கும். எனவே சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும். செயற்கை முறையில் வளரும் ப்ராய்லர் கோழி, நம் உடலுக்கு தீங்கை விளைவிப்பதால், அதை தவிர்த்து இயற்கை முறையில் வளரும் நாட்டுக்கோழியை சாப்பிட்டால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். தகவல் போல்ட் ஸ்கை.
.

9 comments:

 1. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை!

  ReplyDelete
 2. உண்மைதான்... இறக்கைப் பகுதியை சாப்பிடக்கூடாது... இப்ப நான் சிக்கன் சாப்பிடுவதை 80% விட்டாச்சு... தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொள்வேன்....

  ReplyDelete
 3. நானும் சென்னைப்பித்தன் அவர்கள் கட்சி
  ஆயினும் சாப்பிடுவோருக்கு அருமையான
  எச்சரிக்கைப் பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மனதில் வைத்திருக்கவேண்டிய எச்சரிக்கை பதிவு....

  ReplyDelete
 5. இதில் வந்த செய்தி சரியல்ல. கோழிகளுக்கு இங்கு steroid ஊசி போடுவதில்லை. அது தேவையும் இல்லை.

  அரசு அனுமதிக்காத எதையும் எவனும் இங்க செய்யமாட்டான்; ஜெயில் தண்டனை அது இதுன்னு செத்தான். உணவில் கலப்டம் எனபது கொலைகுற்றம் மாதிரி..
  இந்த மருந்தும் கிடைக்கது.

  சர்வ சாதரணமாக 1% steroid ointment- கூட மருந்து சீட்டு இல்லாமல் கிடைக்காது.

  இந்தியாவில் எப்படி என்று தெரியாது. கழுத்தில் ஊசி போட்ட்டலும் மருந்து உடம்பு முழுவதும் உடனே பரவும். கழுத்தில் மட்டும் நிக்காது.

  நிறைய சுட்டிகள் இங்கே..
  http://msucares.com/pubs/publications/p2767.pdf

  http://www.poultryventilation.com/tips/vol24/n4

  அப்படி steroids இங்குள்ள் கோழியில் இருக்கு என்று நீங்க நிரூபிச்சிட்ட்டால் (எளிதாக கண்டுபிடித்து விடல்லாம்), அரசு அவர்களுக்கு போடும் அபராதத்தில் 20% வரை கிடைக்கும்.

  கிட்டதட்ட ஒரே நாளில் 100 கோடிக்கு அதிபதியாகி விடலாம்.செய்து அந்த பந்தை எடுத்துக் கொள்ளட்டுமே!

  இங்கு நாட்டு கோழியெல்லாம் கிடையாது!

  ReplyDelete
 6. நாட்டுகோழி சுவை அதிகம் இல்லை ஆனால் நல்லது

  ReplyDelete
 7. //சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும்//
  இது தவறான செய்தி என்றே கருதுகிறேன் கழுத்தாகட்டும்,இறக்கையாகட்டும் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து அதன் உடல் முழுவது பறவத்தானே செய்யும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாமக்கல் பிஸினெசே படுத்திருமே ? உயிரண உணவு தரக்கட்டுபாடு துறை இதில எந்த நடவடிக்கையும் எடுக்கலயா?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"