நண்பன்னா இப்படிதான் இருக்கணும்... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/15/2013

நண்பன்னா இப்படிதான் இருக்கணும்...


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.

அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.

“சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
“நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து
கொண்டேன் டா” என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.

6 comments:

 1. தாங்கள் எழுதிய கதைதான் நியாயமானது முன்பு.
  ஆனால் தற்போது பணம் இருந்தால்தான் அனைத்தும்.
  இருந்தும் ஒரு விசயம்.
  குறைந்த மூலதனத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்து அந்த தொழில் வளர்ச்சி அடையும் போது நண்பர்களின் அருமை அப்போதுதான் தெரியும். வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 2. உண்மையை
  உரக்க
  உரைக்கும்
  நட்பு சம்பவம்...

  ReplyDelete
 3. நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து
  கொண்டேன் டா//

  உண்மை. ஆனால் இத்தகைய நண்பர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே போகிறது இல்லையா?

  ReplyDelete
 4. பலசமயங்களில் கைகொடுப்பது நல்ல நண்பர்கள் சேர்க்கைதான்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot