Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/17/2013

இதை விட்டுவிட்டால் நீங்களும் பணக்காரர் ஆகலாம். ட்ரைப்பன்னி பாக்கிறீன்களா?சோம்பல் என்றால் என்ன? எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல்(Laziness).

சோம்பல்தான் வெற்றியடையத் துடிக்கும் உங்களுக்கு கடுமையான சத்துரு. சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய சாம்ராஜ்யம்தான்.

வெற்றி என்பது தானாகவே தேடிவரும் தேவதை(Angel) அல்ல! அவளைத்தேடி நாம்தான் பலகாலம் ஓட வேண்டும்.சோம்பலின் மறுபெயர்தான் போரடிக்கிறது என்கிற வார்த்தை. 

எந்தக் காரியத்தை செய்தாலும் உழைக்க வேண்டுமே! நமது உடல் துன்பப்படுமே! பின்பு அனைத்து செயல்களுமே போரடிக்கிறது என்கிறோம். ஆனால் நம் மனதுக்கு பிடித்த சினிமாவுக்கு(cinema) சென்று பாருங்கள்! காதலியை(lover) சந்தித்து மணிக் கணக்காகப் பேசிப் பாருங்கள்! போரடிக்கிறது என்று எவராவது சொல்கிறார்களா? சோம்பலுக்கு அல்வா கொடுத்துவிடுங்கள்.

அல்வா என்றது நினைவுக்கு வருகிறது ஒரு கதை(story). நிச்சயமாய் நீங்கள் நினைக்கும் அல்வா அல்ல. ஒரு நீக்ரோ(neecro), அமெரிக்கன்(American), இந்தியன்(Indian) ஆகிய மூவருக்கு ஒரு அல்வா துண்டு கிடைத்தது. அதை பங்கிட்டு உண்டால் அதை சாப்பிட்ட திருப்தி இருக்காது.

அதனால் அந்த அல்வா துண்டை ஒரு பாத்திரத்தில்(pot) வைத்து மூடி விட்டு அன்றிரவு யாருக்கு சிறந்த கனவு வருகிறதோ அவர்கள் அந்த அல்வாத்துண்டை சாப்பிடலாம் என்று முடிவு செய்து படுத்துவிட்டனர். காலையில் எழுந்தது அந்த பாத்திரத்தை எடுத்துப் பார்த்தபோது அங்கு அல்வா துண்டு இல்லை. எப்படி காணாமல் போயிருக்கும்? ஏதாவது நாய் கவ்விக்கொண்டு போயிருக்குமா? என்றால் இல்லை. நீங்கள் நினைப்பது சரிதான்.

எல்லாம் நம்மாள் செய்த வேலைதான். இந்தியர் சொன்னார், இரவில் கடவுள் தன் கனவில் வந்ததாகவும், அட முட்டாளே ! இனிமையான அல்வாத் துண்டை வைத்துக்கொண்டு இன்னும் கனவுகான(Dream) நினைக்கிறாயே? முதலில் அதை எடுத்து சாப்பிடு என்று சொன்னாராம். அவரும் அப்போதே எழுந்து சாப்பிட்டுவிட்டாராம்.

இதைக் கேட்டு 'அடப்பாவி,எங்களுக்கே அல்வா கொடுத்துவிட்டாயே' என்று ஏமாந்து நின்றனர்.

இது படிக்க சுவராஷ்யமாக இருந்தாலும், இதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். அதாவது, எனக்கு சந்தர்ப்பம் இல்லை..! சான்சு இல்லை..! என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை! என்று நீங்கள் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்தவனோ, தானே சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு, உழைத்துக்கொண்டே சென்று உங்கள் கண்முன்னால் ஜெயித்தும் விடுகிறான்!..

சோம்பல் என்பதும், போரடிக்கிறது என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் காலத்தை கொல்லும் மனநிலையே ஆகும். எனவே, சோம்பலுக்கு அல்வா(Feels) கொடுத்துவிடுங்கள்.இனியும் காலம் இருக்கிறது, இன்று மட்டும் ஓய்வு எடுக்கலாம்' என்று சோம்பல் கொண்டால் அந்த காலம் வரவே வராது.

இன்று மட்டும், இன்று மட்டும் என்று காலம் பறந்துவிடும். பின்பு வெற்றி அடைவது எங்கே? நம்மைப் பார்த்து பிறர் பரிகசிப்பார்கள்(Derision). எனவே சோம்பலை விட்டுத் தள்ளுங்கள்..! உங்களுக்கான வெற்றிப்பாதையில் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைத்து செல்லுங்கள்.. 
வெற்றி நமதே..!!

7 comments:

 1. கருத்தும் அதற்கான அல்வாக் கதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எனக்கு சோம்பலா இருக்கு. நான் அப்புறமா வந்து கமெண்ட் போடுறேன்!!

  ReplyDelete
 3. சோம்பல் இல்லாமல் வேலை செய்தும் ஒண்ணுமே தேற மாட்டேங்குதே வாத்தி...!

  ReplyDelete
 4. வெற்றி என்பது தானாகவே தேடிவரும் தேவதை(Angel) அல்ல!//உண்மைதான் உழைக்கவேண்டும்

  ReplyDelete
 5. சோம்பல் குறித்த கருத்து அருமை...
  அல்வாக் கதை சூப்பர்.

  ReplyDelete
 6. உங்கள் பதிவும் அல்வாப் போல் இனித்தது ..சோம்பல் படாமல் ,பல்லிலும் படாமல் 'லபக் 'கென்று விழுங்கி விட்டேன் !எனக்கு இன்னொரு 'அல்வா 'வேணும் ...விரைவில் தருவீர்களா ?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"