போதையில் மாணவர்கள் - ஒரு அதிர்ச்சி தகவல் - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/21/2013

போதையில் மாணவர்கள் - ஒரு அதிர்ச்சி தகவல்


பேனாவில் எழுதப்படும் தவறான எழுத்துக்களை அழிப்பதற்கு "ஒயிட்னர்" என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த "ஒயிட்னரை" போதைக்காக பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர்.

"ஒயிட்னர்" பாட்டில் மூடியை கழற்றிவிட்டு பத்து நிமிடம் மூக்கால் நுகர்ந்து பார்கின்றனர். சிலர், குடிநீரில் கலந்து குடிக்கின்றனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போதையில் இருக்கின்றனர்.

இந்த ஒய்ட்னர்அலுவலக பயன்பாட்டிற்கு வாங்குவதை விட மாணவர்கள், போதைக்காக வாங்குவது அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி, சில கடைக்காரர்கள் ஒயிட்னரை இரு மடங்கு விலைக்கு விற்கின்றனர்.

இந்த ஒயிட்னர் போதையால் மூளையில் ரத்தக்குழாய்கள் பலகினமாகிவிடும். ஞாபகசக்தியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.இதை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

பாதை மாறும் இந்த போதை மாணவர்களை, பெற்றோர் மற்றும்  ஆசிரியர்கள், காவல்துறையினர் கண்காணித்து இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்வார்களா?

6 comments:

 1. பசங்க மூளை எப்படியெல்லாம் வேலை செய்யிது பாருங்க:(

  ReplyDelete
 2. இந்த சமூகம் எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது ??????..!!!:(

  ReplyDelete
 3. பாதை மாறும் மாணவர்கள்...

  ReplyDelete
 4. ஆமாங்க நானும் இது குறித்து கேள்விப்பட்டிருக்கேங்க...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot