இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

8/24/2013

இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?
ன்னும் கொஞ்ச நேரம் 
என்னைத் 
தூங்கவிடேன்,
கெஞ்சும் இமைகளை 
அலச்சியப்படுத்தி எழுந்து,

இன்று ஒரு நாள் 
மட்டும் குளிக்காமல்விடேன்,
கேட்கும் மனசை
புறந்தள்ளி குளித்துவிட்டு,

இன்னும் இரண்டு 
இட்லி தின்னால் 
என்ன குறைந்துவிடப் போகிறாய்?
எச்சில் சுரக்கும் நாவை 
உதாசீனப் படுத்தி கைகழுவி,

ரஜினி பாட்டானாலும்
அன்றைய 
முக்கிய செய்திகளை மட்டும் 
டிவியில் கேட்டே புறப்பட்டு,

ஒரு வாரம் 
முழுதும் பாடங்களில்
ஐயிக்கியமானாலும்
சனிக் கிழமை விடுமுறைக்கு 
தவமிருக்கிறது மனசு...

ஆனால் 
வெள்ளிக்கிழமை, 
வரத்திற்கு பதிலாய்
சாபம்தான் கிடைக்கிறது!!!

நாளை பனிரெண்டாம்  வகுப்பிற்கு மட்டும்
சிறப்பு வகுப்பு.

10 comments:

 1. என்ன சொல்வதென்று தெரியவில்லை... அருமை...! பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. #வரத்திற்கு பதிலாய்
  சாபம்தான் கிடைக்கிறது!!!#இதுக்குதான் இருபாலர் பள்ளியில் சேரணும்னு சொல்றது !சேர்ந்தா ...சாபம் ஏது,எல்லாமே வரம்தான் !

  ReplyDelete
 3. படிக்கற வயசுல மனச இப்படியெல்லாம் அலைபாய விடக்கூடாதுப்பா... அப்புறம் பின்னால வருத்தப்படுவே!!

  ReplyDelete
 4. 1.09.2013 அன்று மட்டும் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு பதிவர் விழாவுக்கு வந்துவிடுங்கள் நண்பரே

  ReplyDelete
 5. இது எழுதினது யாரு?! ஸ்டூண்டா?! இல்ல வாத்தியாரா?!

  ReplyDelete
 6. Bagawanjee KA said...
  #வரத்திற்கு பதிலாய்
  சாபம்தான் கிடைக்கிறது!!!#இதுக்குதான் இருபாலர் பள்ளியில் சேரணும்னு சொல்றது !சேர்ந்தா ...சாபம் ஏது,எல்லாமே வரம்தான் //

  சரியாத்தான் சொல்றீங்க  ReplyDelete
 7. Blogger ராஜி said...
  இது எழுதினது யாரு?! ஸ்டூண்டா?! இல்ல வாத்தியாரா?!


  கேள்வி நல்ல எடக்கு மடக்கான கேள்விதான்

  ReplyDelete
 8. வாத்தியாரே இப்படிச் சலிச்சுக்கிட்டா,மாணவர்கள்?!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot