Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/05/2013

நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost


ன்ன பொழப்புடா இது...
மாடெல்லாம் அவுத்துவுட்டு
கருப்புக் குடையை 
கக்கத்துல வெச்சிக் கிட்டு
ஒரு கையில
மூங்கக் கொம்பும்
மறு கையில 
எவர்சில்வ தூக்குல 
பழைய சோத்தையும்
எடுத்துகிட்டு 
ரோட்ல போகும்போது 
நாலு பையனுங்க 
கிண்டல் பண்ணும் போது 
நாண்டுகிட்டு 
சாவனும் போல இருக்கும்..ந்த மாடுங்க 
எல்லாம் 
அவங்க அப்பன் ஊட்டு
ரோடுன்னு நினைச்சிகிட்டு
ரோடு பூரா போகையில
சைக்கிள்ல போறவன்கூட
'மாட்ட ஓரமா ஓட்டுடா 
மரமண்ட' அப்படீன்னு 
திட்டிட்டு போவான்...


வன் பேச்சைக்கேட்டு 
ரோட்டோரமா
மாட்டை ஒட்டுனா
ஓரமா போற பெரிசுக
'மாட்ட மனுச மேல ஒட்டுறியே 
கேனப்பயலே 
உனக்கு அறிவிருக்கா? " ன்னு...


வங்களுக்குப் பயந்துகிட்டு 
நடுவுல 
ஓட்டினா லாரிக்காரன்
'ஊட்ல சொல்ட்டு வந்திட்டியா'
எனத் திட்டுவான்..


வங்களைத் தாண்டி 
வயக்காட்டு பக்கம் போனா
'எலே மக்கு பயலே
நெல்லு வயலுல விடறியே'ன்னு
வெய்வான்
அந்த காவக்காரன் ...


லே 
எடுவட்டப் பயலே
மாட்ட ஓட்டும்போது 
கவனமா ஒட்டுலே 
பராக்குப் பாக்காதே 
என மொதலாளி 
திட்டுவான்...


ந்த டிபன்பாக்ஸ்ச
வரப்புலே வெச்சிட்டு 
ஓடிப்போயி
அந்த மாட்ட வெரட்டுரதுக்குள்ள
பசியேல்லாம்
பறந்து போயிடும்...


மாட்ட ஓட்ட
அங்கும் இங்கும் போகையில
காலுல முள்ளு குத்தும்
வர்ற ரத்தத்தை 
தொடச்சிக் கிட்டு 
அப்படியே போயிடனும்...


ச்சிவெயிலையும்
பாக்கணும்,
அடைமழை பேஞ்சாலும்
அசராம மாடுகளப் 
பாத்துக்கணும்...


சூரியன் மறஞ்சப்புரம்
சிதறிகிடக்குற
எல்லா மாட்டையும்
ஒண்ணுசேர்த்து
ஓட்டியாரதுக்குள்ள 
எல்லாப் பயகிட்டையும்
மறுபடியும் 
வாங்கிக் கட்டிக்கணும்..


வீட்டுக்கு வந்த 
மாடுகள 
கழனித் தண்ணி காட்டி 
வெக்கா போட்டு 
தண்ணிக் காட்டையில
பால் கறக்க 
வரேன்னு நினைச்சு 
பசு மாடு உதைக்கும்
முட்டியில ரத்தம் 
பிச்சுக் கிட்டு அடிக்கும்...


மாடு மேய்க்கிறதுல
இத்தனை 
சிரமம் இருக்கையில
நீ மாடு மேய்க்கத்தான் 
லாயக்குன்னு
தலமொற, தலமுறையா
சொல்லிக்கிட்டு 
இருக்காங்க
பள்ளிக் கூட வாத்திங்க...!!!

ம்.. என்ன பொழப்புடா இது ...10 comments:

 1. இந்தக் கவிதையைப் படித்தபிறகு யாரும்,

  நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டமாட்டார்கள் நண்பரே.

  ReplyDelete
 2. நிச்சயம் கடினமான வேலை தான்....

  ReplyDelete
 3. நம்மளை அப்ப்ப்ப்ப்படி சோல்லி சொல்லித்தானே வளர்த்தாங்க

  ReplyDelete
 4. நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost | வேடந்தாங்கல்

  வாத்தி என்பது
  வருத்தம் அளித்தாலும்,
  அது கிராமத்து மரியாதை,
  மா டுமேய்ப்பதும்,
  கோழி ஓடிப்பிடிப்பதும்,
  ஆழக்குழி வெட்டலும்
  தொழிலுக்கு மரியாதை
  இது பட்டதாரிகளால் இயலாது ,
  அனுபவக் கலை.
  இதை மதிக்காமல்
  இருந்ததால் கிராமமே காலி.
  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
  மாறிவிட்டதால் எதிர்கால உணவுப்பஞ்சம்.
  விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி
  இந்நிலை வரும் காலம்.
  மாடுகள் மேய்ப்பது உயர்தொழில்.
  விவசாயத்தோடு இணைந்த தொழில் .
  ஏனோ ஏளனம் !செய்து பார்த்தல் கடினம்.
  நல்லதொரு கவிதை,
  அரசு கொடுக்குது இலவச ஆடு.
  இது அன்றே விடுதலை ஆன ஆரம்பத்தில் செய்தால்.
  கிராமம் காலி யாகாதிருந்திருக்கும்.

  ReplyDelete
 5. நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost | வேடந்தாங்கல்

  வாத்தி என்பது
  வருத்தம் அளித்தாலும்,
  அது கிராமத்து மரியாதை,
  மா டுமேய்ப்பதும்,
  கோழி ஓடிப்பிடிப்பதும்,
  ஆழக்குழி வெட்டலும்
  தொழிலுக்கு மரியாதை
  இது பட்டதாரிகளால் இயலாது ,
  அனுபவக் கலை.
  இதை மதிக்காமல்
  இருந்ததால் கிராமமே காலி.
  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
  மாறிவிட்டதால் எதிர்கால உணவுப்பஞ்சம்.
  விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி
  இந்நிலை வரும் காலம்.
  மாடுகள் மேய்ப்பது உயர்தொழில்.
  விவசாயத்தோடு இணைந்த தொழில் .
  ஏனோ ஏளனம் !செய்து பார்த்தல் கடினம்.
  நல்லதொரு கவிதை,
  அரசு கொடுக்குது இலவச ஆடு.
  இது அன்றே விடுதலை ஆன ஆரம்பத்தில் செய்தால்.
  கிராமம் காலி யாகாதிருந்திருக்கும்.

  ReplyDelete
 6. அன்பின் கருண் - அருமையான கவிதை - மாடு மேய்ப்பதைக் கிண்டல் செய்பவர்களுக்கும் திட்டுபவர்களுக்கும் ஒரு பதில்க் கவிதை. எத்தொழிலும் எளிதல்ல - பழகய்ம் வரை - அதற்காக ஆளுக்கு ஆள் திட்டக் கூடாதல்லவா .... வாத்தி என்னும் சொல் சற்றே வருத்தத்தினைத் தருகிறது. ஆசிரியப் பணியே அறப் பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற வேத வாக்கினைக் கடைப்பிடிக்கும் ஆசிரியப் பெருந்தகைகளைப் பாராட்ட வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. ஹா ஹா...
  பாத்துக்கவோய்... மாடு மேய்க்கிறது ஈசியில்லப்பு....

  ReplyDelete
 8. மாடு மேய்த்தலின் கஷ்டங்கள் கவிதை வடிவில்! இந்த பதிவை படித்த வாத்தியார்கள் திட்ட யோசிப்பார்கள் இனி! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"