Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/17/2013

காதல் தோல்வியா? அப்ப கண்டிப்பா படிங்க... (கவிதைப் போட்டி)

காதல் கவிதைஎன் 
உயிர்நாடி 
மொத்தமாக 
ஒன்று சேர்த்து 
உனக்கொரு 
கண்ணாடி செய்வேன்...!

ஒரு பக்கம் 
நீ முகம் பார்க்க...
மறுபக்கம் ரசமாய் 
நானே இருப்பேன்...!

என்னை 
மறைத்துக்கொண்டு
உன்னை 
உனக்கே காட்டுவேன்...!

நீ 
தலை சீவும்போது 
உதிரும் முடிகளுக்காக 
நானழுவேன் 
அதை 
நீயறியாய்...!

நீ 
பூ வைப்பதற்காக 
திரும்பும் போதெல்லாம் 
இயங்காத 
என் மன அலை 
தீயெரியும்...!

நீ 
உன் கண்களுக்கு
'மை' வைக்கும்
போதெல்லாம் 
நடுங்கும் 
என் இதயம், 
கண்ணீர் 
எங்கே வந்துவிடுமென்று...!

நீ 
என்மீது ஒட்டிப்போன 
பொட்டுகளால்
என் மனம் 
ஜென்ம சாபல்யமடையும்...!

உன் 
பூ மேனியில் 
இருக்கும் 
தூசுக்களை 
துடைக்கும் போதேல்லாம், 
உனக்குதெரிந்திருக்க 
வாய்ப்பில்லை
நான் சிலிர்த்தது...!

.......
.......
.......
.......
.................   ...! 


இந்த கவிதையை முடிக்க,
பதிவு உலக கவிஞர்களை 
அழைக்கிறேன்.
என்னுடைய முடிவுடன் ஒத்துப்போகும்
சிறந்த முடிவிற்கு 
சிறப்பான பரிசுண்டு.

சொக்கா..சொக்கா...


மூலம் ஆரா.

29 comments:

 1. வணக்கம்

  நீ
  தலை சீவும்போது
  உதிரும் முடிகளுக்காக
  நானழுவேன்
  அதை
  நீயறியாய்...!

  கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ரூபன்.

   Delete
 2. என்னை
  உடையாமல்
  காத்திடு
  பெண்ணே
  உன்னுயிரும் நான்தானே !

  மன்னா பரிசைக் கொடுங்கள்
  (கரண்ட் வில்லுக் கட்டணுமையா நிலைமையைப்
  புரிஞ்சுக்கோங்க :) ) தருமி எனக்கே எனக்காக .சத்தியமா
  இது நான் எழுதிய பாட்டுத்தான் .நம்புங்கள் மன்னா :)))))

  ReplyDelete
  Replies
  1. நான் எதிர்ப்பார்த்தது காதல் தோல்வி முடிவு. தலைப்பு பங்க சகோ...


   அனால் உங்கள் முடிவும் அருமையான, சுகமான முடிவுதான்.. நன்றி..

   Delete
 3. பரிசு ஆயிரம் பொற்காசுகள்னு சொல்லியிருந்தா கலந்துக்கிட்டிருக்கலாம்.... சொல்லலையே? அதனால நா கலந்துக்கலை...:))

  ReplyDelete
 4. அடடா அழகான வரிகள்.. ஆமா எங்க பதியனும் மீத வரிகளை ?

  ReplyDelete
  Replies
  1. பாராட்டியமைக்கு நன்றி...

   Delete
  2. மீத வரிகளை கருத்து பெட்டியில் பதியனும் சகோ..

   Delete
 5. நீ
  கட்டியணைத்த
  சேலையில்.
  ஓவியமாய்
  ஒட்டியிருக்கும்
  என் காதலும்.


  உன்
  விழித்தீண்டலில்
  விடியாமல்
  கிடக்கிறதென்
  வானம்..

  நீ
  உறங்கிப் போகிறாய்
  எனை பார்த்தபடியே
  உனக்கு தெரிந்திருக்க
  வாய்ப்பில்லை
  உனக்காகவே
  விழித்திருக்கும் எனையும்
  உனக்காகவே துடித்தே
  கிடக்கும் இதய துடிப்பையும் !..

  ReplyDelete
  Replies
  1. நான் எதிர்ப்பார்த்தது காதல் தோல்வி முடிவு. தலைப்பு பங்க சகோ...


   அனால் உங்கள் முடிவும் அருமையான, சுகமான முடிவுதான்.. நன்றி..

   Delete
 6. நல்ல கவிதை. போட்டி முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. கவிதை அருமை
  நிறைவு வரிகளை இப்படி முயற்சிக்கிறேன்


  உலக அழகியே !
  இவையெல்லாம்
  உனக்கு உணர்த்து முன்
  என்னை உடைத்து நொறுக்கியது
  உன் உதட்டிலிருந்து உதிர்ந்த
  ஒரு சொல் .
  இல்லை இல்லை
  அது
  என்னைத் தாக்கிய கல்

  ReplyDelete
 8. உன்னெழிலும்
  வெட்கசிவப்பும்
  காதல் மொழிகளுமாய்
  கிறங்கி கழிந்த பொழுதுகள்....
  தெளிந்து தவித்தேன் - உன்
  காதில் ஹியர் போன்!

  ReplyDelete
 9. உன்னெழிலும்
  வெட்கசிவப்பும்
  காதல் மொழிகளுமாய்
  கிறங்கி கழிந்த பொழுதுகள்....
  தெளிந்து தவித்தேன் - உன்
  காதில் ஹியர் போன்!

  ReplyDelete
 10. நல்ல கவிதைதான், அது சரி மேலும் தொடர காதலில் தோற்றிருக்க வேண்டுமா? நான் வரலைங்க இந்த விளையாட்டிற்கு.

  ReplyDelete
 11. எத்தனை முறை முயன்றும்
  கரை சேராமல் எழுந்து வீழும்
  கடல் அலை போல் ஆனது
  என் காதலும் - உன் நினைவுகளில்
  மீண்டும் மீண்டும்
  எழுந்து வீழ்கிறது - உனை சேராமல்

  ReplyDelete
 12. வந்துவிட்டோமே வந்துவிட்டோமே :)) கவிதை போட்டி வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. நீ சிரித்தபோதுகூட
  தெரியாதடி
  உன் விழி
  ஊசியால் என்னை
  கிழிக்கப் போகிறாய் என்று...!

  ReplyDelete
 14. போட்டியில் கலந்துகொண்ட அனைத்து இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 15. என்னைத் தூக்கி எறிந்தாய்!
  உடைந்துபோனேன் நூறு துண்டாய்=ஆனால்
  ஒவ்வொரு துண்டிலும் நீதானே நிற்கிறாய்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"