தவறே செய்யாதவனா நீ? - மனிதம் மறுக்கும் உண்மை. - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

9/19/2013

தவறே செய்யாதவனா நீ? - மனிதம் மறுக்கும் உண்மை.வாய்ப்புகள் இருப்பதினால் 
தினமும் அதிகரிக்கிறது
எனது தவறுகள்...

ஆனால் அதன் பாதிப்புகள்
எனக்கு மட்டுமே...

தினம் ஒருவரை 

நம்புகிறது மனது
இவரை நம்பலாம் என்று...

ஆனால் மறுதினமே 

அதை 
உடைத்து விடுகிறார்கள்... 

அனைவரும் கடந்து செல்லும்
சாலையோர மரமாய் நான்...

எத்தனை பேர் கடந்தாலும்
நான் மட்டும் அங்கேயே...

மழையின் ஈரமும்
வெயிலின் வெப்பமும்

தென்றலின் காற்றும்
தாங்கும் மரமாகவே 

இருக்கிறது 
என்னுடைய வாழ்க்கை...

18 comments:

 1. வணக்கம்

  நம்பிக்கைதான் வாழ்கை பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்

  நம்பிக்கைதான் வாழ்க்கை பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. எது நடந்தாலும் நம்பிக்கையோடு அடுத்த கட்டத்தை நோக்கி......

  ReplyDelete
 4. மரமாக இருப்பதால் அதிக நன்மைகளும் உண்டுங்க.

  ReplyDelete
 5. வாய்ப்புகள் இருப்பதினால்
  தினமும் அதிகரிக்கிறது
  எனது தவறுகள்...//

  உண்மைதான். இன்றைய உலகில் தவறுகள் நிறைந்திருக்கக் காரணம் வாய்ப்புகள்தான். பண்டைய காலத்தில் வாழ்ந்து மறைந்த பல அருளாளர்களும் புனிதர்களும் இன்றைய சூழலில் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இன்று தவறிழைக்க வாய்ப்புக்கள் சற்று அதிகம்தான்..

  அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. மறுக்க முடியாத உண்மை...
  உள்ளிருந்து உருத்தும் கவிதை

  ReplyDelete
 8. //தினம் ஒருவரை
  நம்புகிறது மனது
  இவரை நம்பலாம் என்று...

  ஆனால் மறுதினமே
  அதை
  உடைத்து விடுகிறார்கள்..// நான் மட்டும் தனியில்லை போலவே..
  நீங்கள் சொல்லும் மரமாய் இருந்துவிடுதல் தான் நன்றோ...வெட்டாமல் விட்டுவிட்டால் நல்லது கருண். நல்ல கவிதைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுகளுக்கு நன்றி கிரெஸ்

   Delete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot