பள்ளியில் நடந்த சில உண்மைகள் - Repost - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

9/13/2013

பள்ளியில் நடந்த சில உண்மைகள் - Repost
ம்மா அடிப்பதாய்
வகுப்பில் வந்து 
அழுவது
வாடிக்கையாகி விட்டது 
அந்தச்  சிறுமிக்கு ....

ன்று கேட்டேன்,
' அம்மா ஏன் 
அடிக்கடி அடிக்கறாங்க?'
" அம்மாவுக்கு 
என்னை பிடிக்காது "
ஏன்?
"என்னோட ஜாதகம்தான் 
அப்பா சாவுக்கு காரணமாம் "  

பாசத்தைவிடவும் 
வலிவாகவே இருக்கின்றன
இந்த
பாழாய்ப்  போன நம்பிக்கைகள்...! 

26 comments:

 1. அந்த சிறுமியின் பிறப்புக்கு காரணமே தாங்கள்தான் என்பதை உணர முடியாத பெற்றோர்கள் ...இப்படியுமா மூட நம்பிக்கை ?

  ReplyDelete
 2. பாவம் சிறுமி...புரியாத ம(மா)க்கள்

  ReplyDelete
 3. பாழாப்போன நம்பிக்கைகள் பிஞ்சுக் குழந்தையை பாதித்து விட்டதே....

  ReplyDelete
 4. சிந்திக்க வைக்கும் வரிகள்...

  ReplyDelete
 5. கொடுமை! மூட நம்பிக்கைகள் பாசத்தையும் தள்ளி வைக்கிறது.

  ReplyDelete
 6. நீங்க அந்தம்மாவை கூப்பிட்டு பேசி பாருங்க கருண்!

  ReplyDelete
  Replies
  1. பேசினா உங்க வேலைப் பாருங்க .. அப்படீன்னு பதில் வந்தது சகோ..

   Delete
 7. பிள்ளைப் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது, தாய் மாமனுக்கு ஆகாது.... இன்னும் யார் யாருக்கெல்லாமோ ஆகாது... என்ன கொடுமை இது? எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமை போகவே போகாதா?

  குட்டி கவிதையில்தான் எத்தனை பொருள்...

  அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. பாசத்தைவிடவும்
  வலிவாகவே இருக்கின்றன
  இந்த
  பாழாய்ப் போன நம்பிக்கைகள்...!

  கசப்பான உண்மை நண்பா.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் கசப்பான உண்மைதான் நண்பரே..

   Delete
 9. பிஞ்சு மனதில் கொடுமை விதை. ஆற்றுவது யாரோ ?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot