இவள்தான் விலைமாது என்கிற விபச்சாரி... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

10/12/2013

இவள்தான் விலைமாது என்கிற விபச்சாரி...
அந்த
தேசிய நெடுஞ்சாலை ஓரம்
அவளுக்கு
தொழில் காமம்
உடல் முதலீடு
வயது தேய்மானம்...!

கடவுளையும்
வேண்டிக்கொண்டுதான்
வருவாளாம்!
அந்த கருப்பு
இரவுக்குள்
புதுப் பெண்ணாய் ...!

கருப்பையில் விழும்
வெள்ளைத் தேமலைவிட
முகத்தில் விழும்
வெள்ளைத் தேமலுக்கே
வருத்தமென்றாl...!

கண்ணகி என்று
ஆரம்பிப்பதற்குள்
அவள் கணவன்
மாதவியுடன் என்றான்...!

இருபத்தி ஐந்து ரூபாய்க்கு
பேட்டி முடிந்தது
அவசரக் குரல்,
அடுத்த ஆளுக்கு
விலை போகிவிட்டாள் ...!


17 comments:

 1. அவர்களின் அவல வாழ்வு குறித்த
  கவலையை விதைத்துப்போகும் கவிதை
  அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா..

   Delete
 2. வணக்கம்
  அவலம் சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அவலத்தை சொல்லும் கவிதை...
  வலி நிறைந்தது...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வலி நிறைந்த வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

  ReplyDelete
 5. [[தொழில் காமம்
  உடல் முதலீடு
  வயது தேய்மானம்...!]]

  இந் நன்னாளில் இதை படிக்க அசிங்கமாக இருக்கு!
  இன்றைக்கு என்ன நாள் என்று உங்கள் இடுகையில் எழுத என்னால் முடியவில்லை; சிலருக்கு அது பிடிக்காது; ஆபாசம் என்று கருதலாம். ஆனால், என் இடுகையில் எழுதியுள்ளேன்.
  தமிழ்மணம் வோட்டு பிளஸ் 1

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்ய இப்படியும் இருக்கிறார்கள்..

   Delete
 6. அவளுக்கு
  தொழில் காமம்///தவறு நண்பரே பணத்தேவை

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot