ஒரு தாயும் மனசே இல்லாத அவளது மகனும்... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

10/23/2013

ஒரு தாயும் மனசே இல்லாத அவளது மகனும்...கால் வலிக்க நின்னேன் 
ரேசன் கடையில, 
இன்னைக்கு 'ஸ்டாக்' இல்லை,
நாளைக்கு 'வா' ன்னு
சொல்லிட்டான்...!

பசிக்குது 'ஆத்தா'ன்னு 
அழுவுற உனக்கு 
என்னத்த போடுவேன்?

அதை யோசிச்சு,
எடுத்து வந்தேன் 
மேலத்தெரு பக்கமா 
வாரப்ப,
பொணத்துக்கு வெச்சிருந்த 
வாய்க்கரிசிய...!

அந்த 
அரிசிய வெச்சு 
செஞ்ச கஞ்சிக்கு 
எதிர்வூட்ல வெளைஞ்ச 
பச்ச மொளகாய 
வெஞ்சனமா வச்சுக் 
கொடுத்தேன்...!

நான் பெத்த ராசா
ஒத்த வாய தின்னுபுட்டு 
உப்பில்லன்னு 
சொன்னியேடா 
கண்ணீரைக் 
கரைச்சு குடுத்தேன், 
உப்பு போதுமா ராசா ...! 

21 comments:

 1. கவிதை மனதைத் தொட்டது.....

  ReplyDelete
 2. Replies
  1. ஒரு கவிஞனின் வெற்றியே அதுதான்..

   Delete
 3. நெஞ்சைத் தொட்டுக் கலக்கிய அருமையான கவிதை!

  ReplyDelete
 4. மனதை பாரமாக்கிவிட்டது உங்கள் படைப்பு

  ReplyDelete
 5. படமும் கவிதையும்
  மனம் கலங்க்கச் செய்து போனது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கலங்க வைக்கும் கலக்கல் கவிதை !
  த.ம 5

  ReplyDelete
 7. வலிமை மிகுந்த வலி தரும் வரிகள்! அருமை!

  ReplyDelete
 8. படமும், கவிதையும் கலங்க வைத்து விட்டது.

  ReplyDelete
 9. நான் பெத்த ராசா
  ஒத்த வாய தின்னுபுட்டு
  உப்பில்லன்னு
  சொன்னியேடா
  கண்ணீரைக்
  கரைச்சு குடுத்தேன்,
  உப்பு போதுமா ராசா ...! //

  வயிற்றை கலக்கிய கவிதை! ஒப்பற்றது!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot