"இந்த நாள் இனி என் வாழ்வில் வரவேக் கூடாது...!?" - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

10/07/2013

"இந்த நாள் இனி என் வாழ்வில் வரவேக் கூடாது...!?"


விவரம் அறியாத
வயதில்
இந்தக்
காலண்டர் தாளைக்
கிழித்து
விபூதி மடித்துக் கொண்டேன்...!

விவரம் தெரிந்தப்
பருவத்தில்
அதற்காக
கத்துக் கிடந்த
நாட்கள் பல...!

இப்போதெல்லாம்
பிப்ரவரி மாத
காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!

இப்போது அதை
நான் கிழிப்பதில்லை...
அதுதான்
என்னை....!


source Aaraa.

22 comments:

 1. ஹா! ஹா! ஏன் வீட்டம்மா கூட கொண்டாடலாமே!!

  ReplyDelete
 2. ஏங்க...? அது எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருகிற தினம் ஆயிற்றே?

  ReplyDelete
 3. அட பாவமே, உங்கள் மனைவிக்கும் பிப்ரவரியில் தான் பிறந்த நாள் வருகிறதா! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
 4. அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete
 5. சில விஷயங்கள்
  சொல்லாது போனால்தான்
  நிறைச் சொல்லும்
  அப்படித்தான் முடிக்காது விட்ட
  இறுதி வரி நிறையச் சொல்லிப்போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. செல்லப்பாவின் பின்னூட்டத்தை
  மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
 7. ஹாஹா
  //காலண்டருக்குள்
  ஒரு
  கூர்மையான கத்தி
  ஒளிந்துகொண்டிருக்கிறது...!//
  2014ல் அந்தக் கத்தி காலெண்டரில் இல்லாமல் போக வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நானும் எதிர்ப்பார்க்கிறேன்.,

   Delete
 8. பிப்ரவரி 14 யை மறங்க,நவம்பர் 14யை கொண்டாடுங்க ,சந்தோசமா இருக்கலாம் !
  த,ம 4

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot