Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/08/2013

சினிமா நடிகர்களுக்கு சொம்பு தூக்குவது நிறுத்துவோம்.


sakthistudycentre.blogspot.com

சந்தாப்பவாதம், ஏமாற்றி பிழைத்தல்,ரகசிய பேரம், கும்பிடுபோடுதல் என குறுக்கு வழியில் பயணிக்கிறவர்களால் எந்தப் பிரச்சனையையும் நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பது நிதர்சனம். 

திரை நாயகர்கள் தம்முடைய சொந்தப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியவில்லை(விஸ்வரூபம்,தலைவா) அவர்களிடம் காவிரிப் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, ஈழப்பிரச்சனையை ஏன் முன்னெடுக்கவில்லை, விலைவாசி உயர்வுக்கு ஏன் கண்டனம் தெரியவில்லை, என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பது கேலிக்குரியது. 

ஒருமுறை கூடங்குளம் பிரச்சனையில் சிறை சென்ற பெண் பற்றிய செய்தியை படிக்க நேர்ந்தது. நடுத்தர வயது மீனவப் பெண். படிக்காதவர். சிறை சென்று தினம் கஷ்டத்தை அனுபவிக்கும் போதும் அணு உலை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

பேருந்தில் கையில் விலங்கிட்டு நீதி மன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போது, பேருந்தில் இருந்த சிலர் பிரியாணிக்காகவும், ஐநாறு ருபாய்க்காகவும் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஆயிரம் ரூபாயும், பிரியாணியும் தர்றேன் நீ இந்த மாதிரி கையில் விலங்கோடு சிறைக்கு போகத் தயாரா என்று இவர் திருப்பி கேட்டிருக்கிறார். ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் அவர்கள் போராடவில்லை. அது உரிமைக்கான போராட்டம், எதிர்காலத்துக்கான போராட்டம். 

அந்த மீனவப் பெண்ணிடம் காணப்பட்ட உறுதியிலும், நெஞ்சுரத்திலும் கால்வாசி இல்லாதவர்கள் நமது சினிமா அட்டக்கத்திகள். இவர்களைப் போய் தலைவா என்றும், தலைமை ஏற்க வா என்றும் கூவுவதைவிட கேவலம் என்ன இருக்கிறது? இந்த அட்டக்கத்திகள் திரையரங்கு இருட்டில், இருந்தால் இமயமலை எழுந்தால் எரிமலை என்று சுயபுகழ்ச்சி பாடுகையில் கைத்தட்டுகிற ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

நல்ல திரைப்படங்களைப் பார்ப்போம், அந்தப் படங்களை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு சொம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். 

20 comments:

 1. நல்ல திரைப்படங்களைப் பார்ப்போம், அந்தப் படங்களை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம்.//

  அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ரசனை என்பது நம் அனைவருக்கும் ஒன்றாக அமைந்துவிடுவதில்லை. இவ்வளவு ஏன்? நல்ல தரமான பதிவுகளுக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு அளிக்கின்றனர். சினிமாக்காரன் சேரன் விவகாரம் சூடாக இருந்தபோது அவருடைய பெயர் தலைப்பில் இருந்த ஒரே காரணத்திற்காக என்னுடைய ஒரு பதிவை நான்காயிரம் பேர் ஓரிரு நாட்களில் படித்தபோது நான் உண்மையில் வெட்கமடைந்தேன். இதுபோன்றுதான் இன்று வரும் பல மொக்கை பதிவுகளுக்கும் எத்தனை, எத்தனை கருத்துரைகள், பரிந்துரைகள்? பதிவுலகில் உள்ள பலரும் படித்த பட்டதாரிகள், இளைஞர்கள். இவர்களுடைய ரசனையே இப்படியிருக்கும்போது திரைப்படத்தை பெருமளவில் பார்க்க வரும் பாமரனின் ரசனை எப்படி இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஜோசப் சார் நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.

   Delete
 2. அட எப்படிங்க..இதைத்தான் நான் என் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நல்ல திறமையைப் பாராட்டலாம், ரசிக்கலாம்..அதை விட்டு எதற்கு ரொம்ப பண்ணுகிறார்கள் என்று..மக்களுக்குப் புரிந்தால் சரி.

  ReplyDelete
 3. வணக்கம்

  காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.... பதிவு பற்றிய அலசல் நன்று. வாழத்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நல்ல பதிவு. கருண் நல்ல படம் என்றால் ரசிப்பதுடன் நிறுத்தவேண்டும். நல்ல அறிவுரைதான். ஆனால் புரியவேண்டியவர்களுக்கு இது புரியுமா?

  ReplyDelete
 5. நல்ல கருத்து .... அவர்கள் கோடி கோடியா சம்பாதிப்பதற்கு நாம் ஏன் போராட வேண்டும் ..?

  ReplyDelete
 6. நெத்தியடி கருண்.!

  மக்கள் உணரணும்.

  ReplyDelete
 7. ஜாதியின் பின்னால் போகிறார்கள் .இல்லையென்றால் இப்படி நடிகர் ,நடிகைகளின் பின்னால் போகிறார்கள் ...நாடு எங்கே போகுமோவென்றுதான் புரியவில்லை !

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை நண்பரே...

   Delete
 8. எங்கமலேசியாவில் இந்த கூத்து கிடையாது.

  ReplyDelete
 9. சினிமா கலைஞா்கள் பின்னால் போகக்கூடாது.ரைட் .ஓ.கே.
  ஆனால் மதவாதிகள்,அரசியல்வாதிகள் பின்னால் சொம்பு துாக்குபவர்களைப்
  பற்றி என்ன சொல்ல.அதைப் பற்றி பேசினால் சர்வ கட்சி ஆட்டோ வந்து விடும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 10. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"