அட... பள்ளியில் நடந்த ஒரு கொடுமையான அனுபவம்... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

2/10/2015

அட... பள்ளியில் நடந்த ஒரு கொடுமையான அனுபவம்...


பள்ளி ஆண்டுவிழா..
வழக்கமாக சுட்டித்தனம் செய்யும் அனிதா, சோகமாக அந்த வகுப்பறையில்.. மெல்ல அருகே போய், ஏய் வாண்டு ஏன் சோகமா இருக்க, அங்க பைனல் டான்ஸ் ரிகர்சல் நடந்துட்டு இருக்கே போகலையா என கேட்டதும், அழ ஆரம்பித்துவிட்டாள்...
பின்பு மெதுவாக சமாதானம் செய்து காரணம் கேட்டேன்.
இன்னைக்கு ஈவினிங் பங்சன்-க்கு எங்க அம்மா வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க சார், என்னோட டான்ஸ் புரோகிராமும் பாக்க மாட்டாங்கலாம் . 
எனக்கு வராத, டான்ஸ்-ஐ கஷ்டப்பட்டு எங்க அம்மாவுக்காக கத்துகிட்டேன் சார். 
அவங்க வந்து பாக்க மாட்டாங்கலேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு என்றாள்.
உங்கம்மா வராததற்கு என்ன காரணம், என கேட்டேன். 
அவள் சொன்ன பதிலை கேட்டு நான் அழுதே விட்டேன்.  
"எங்க அம்மாவுக்கு வரணும் தான் இருக்கு, ஆனா அவங்களுக்கு போட்டுக்க நல்ல டிரஸ் இல்லையாம். எல்லா புடவையும் கிழிஞ்சதா தான் இருக்காம் என்றாள்".
ச்சே... என்ன கொடுமை...
கிராமம் சார்ந்த நகரத்துப் பள்ளியில் ஆசிரியராக இருப்பது என்பது, 
என்ன சொல்ல? டாட்

" அட..." இந்த தொடர் முழுவதும் என்னுடைய , என் நண்பர்களுடைய அனுபவங்களை பதிவு செய்யப் போகிறேன். இந்த அனுபவங்கள் "அட ச்சை", "அட சூப்பர்", "அடக் கொடுமை" எப்படியும் இருக்கும்.

7 comments:

 1. உண்மையில் அடக் கொடுமைதான்....

  ReplyDelete
 2. உண்மையிலேயே வேதனை தரும் விஷயம்தான்!

  ReplyDelete
 3. அடடா... இப்படி ஒரு கொடுமையா?

  ReplyDelete
 4. வருத்தப்பட வைத்த கொடுமை...!

  ReplyDelete
 5. தொடர்ந்து பதிவு செய்யுங்க... ஒரு ஆசிரியரின் சமுதாயப் பார்வை...

  ReplyDelete
 6. அடக் கடவுளே
  அட ராமா
  அடடே
  அட மழையே
  அடங்கப்பா 'இது ஓலக நடிப்புடா சாமி' இப்படி வேணும்கிறத பந்தை எடுத்து போட்டு அடிங்க

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot